பிரியாணியோட ரிஷிமூலம் பெர்ஷியாதான்..ஆனா இப்போ முழுக்க முழுக்க அது நம்மோட நமக்கு பிடிச்ச தேசிய உணவாகவே ஆய்டுச்சு..அதுலையும் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பிரியாணி ஸ்பெஷலா ஆய்டுச்சு.. முக்கியமா திண்டுக்கல் பிரியாணி ரொம்ப ரொம்ப ஸ்பெஷலா மாறிடுச்சு..சீரக சம்பா அரிசியோட, வாசமான மசாலா கலந்து, பதமான கறியும் சேர்ந்து செய்யற அந்த பிரியாணியோட , சுவையும் வாசமும் நாம சாபிட்டப்புரமும் நம்ம மனசிலையும் நாவுலையும் அப்படியே ஒட்டிக்கும்..
1957ல திரு நாஅகசாமி நாயுடு அவர்களால ஒரு சின்ன கடைல இருந்து தொடங்குன இந்த பிரியாணியொட பயணம் இன்னைக்கு வரை அந்த ருசிய நமக்கு தந்துட்டு வருது பிரியாணிக்கு ஒரு ப்ராண்ட்னா அது திண்டுகல் பிரியாணிதான்னு ஆய்டுச்சு..