மிக வேகமாக வளரும் தொழில் நுட்ப சூழலில் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி என்பது அந்த நிறுவனம் புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் அந்த நிறுவனத்திற்க்கான மென்பொருளை தேர்ந்தெடுத்து, பயன்படுத்தி வெற்றிக்கான வியூகத்தை எப்படி வகுக்கிறது என்பதில்தான் உள்ளது.
சிறு – நடுத்தர, மற்றும் பெரு நிறுவனங்கள் தங்களின் செயல்பாடுகளை திட்டமிடவும், ஒழுங்கமைக்கவும் மற்றும் மேம்படுத்தவும், வணிக நோக்கங்களை அடையச் செய்யவும் மென்பொருள் பயன்பாடு மிக அவசியம். மென்பொருள் (software) பயன்பாடு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கிய யுக்தியாக (Strategy) உள்ளது.
சேவையக (Software as a Service – SAAS) மென்பொருள் வழங்கும் துறையில் கோயமுத்துரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் வியூக் இன்ஃபர்மேஷன் (Vyoog Information) நிறுவனத்தின் eVyoog எனும் ERP மென்பொருள் சிறு – நடுத்தர, (SME) மற்றும் கார்பொரேட் (Corporate) நிறுவனங்களுக்கான மிகச்சிறந்த மென்பொருள் சேவையை SAAS Cloud தொழில் நுட்பத்தில் வழங்கிவருகிறது.

“நிறுவனத்தின் திட்டமிடுதலில் (Planning) துவங்கி மூல பொருள் கொள்முதல் (Purchase) , உற்பத்தி (Production), விற்பனை (Sales), வாடிக்கையாளர் தொடர்பு மேலான்மை (CRM), மனித வள மேலாண்மை (Human Resource), நிதி(Finance) ஆகிய முக்கிய தொகுதிகளை eVyoog கொண்டுள்ளது , உற்பத்தி மற்றும் சேவை துறை நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் eVyoog மிக சிறப்பான தொழில் நுட்பத்தில் உருவாக்கபட்டுள்ளது” என இந்த நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் திரு அஷோக்குமார் அவர்கள் கூறினார்.
மேலும் அவர் கூறும்போது,
“eVyoog மென்பொருளின் இயங்குதளம் கிளவுட் தொழில் நுட்பத்தில் (Cloud Technology) இயங்குவதால் மிக வேகமாகவும், அதிக செயல் திறனோடும் அதே சமயம் பாதுகாப்பையும் வாடிக்கையளர்களுக்கு வழங்குவதாக கூறினார்.”

Vyoog நிறுவனத்தின் மார்கெட்டிங் இயக்குனர் திரு சண்முகசுந்தரம் அவர்களிடம் உரையாடியபோது .
” எங்களின் தொடர்ச்சியான தயாரிப்பு மேம்பாடு மற்றும் சிறந்த சேவைகள் மூலம் வாடிக்கையாளர்களை ஈர்த்து அவர்களின் தேவைகளை கருத்தில்கொண்டு செயல்படுவதால், எங்கள் மென்பொருளை தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள், மேலும் எங்கள் வாடிக்கையாளர்களின் வெற்றியே எங்களின் வளர்ச்சி” என்கிறார் பெருமிதமாக.
” eVyoog, ஃபவுண்டரிஸ், டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரி மற்றும் டூல்ஸ் & மெஷினரி உற்பத்தித் தொழில்களுக்கும் பிற சேவை நிறுவனக்களுக்கும் பயன்படுவதாகவும், இந்தியாவில் இயங்கும் பல முன்னனி நிறுவனங்கள் eVyoog வாடிக்கையாளர்களாக இருப்பது எங்களுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது” என்று இந்நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான திரு உலகப்பா கூறுகிறார்.

eVyoog ன் முக்கிய அம்சங்கள்,
தயாரிப்பு செயல்முறையை மேம்படுத்தி (Improve The Production & Invoice Process). வீண் விரயங்களைக் குறைத்து (Minimize Waste). லாபத்தை அதிகரிக்கவும் (Increase Profitability). உங்கள் வணிகம் மற்றும் உற்பத்தி செயல்முறையின் நிகழ்தன்மையை தெரிவுசெய்து, சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான முக்கிய நுண்ணறிவுகளை eVyoog மென்பொருள் வழங்குகிறது.
உங்கள் நிறுவனம் எந்த துறை சார்ந்திருந்தாலும், எத்தனை அளவு உற்பத்திதிறன் கொண்டிருந்தாளும் உங்களுக்கான மிகச்சிறந்த Cloud SAAS மென்பொருள் eVyoog.
நிறுவனத்தின் வலைதளம் : www.vyoog.com