மனித மூலதன மேலாண்மை (HCM) என்பது ஒரு நிறுவனத்தின் மனித வளங்களை நிர்வகிப்பதற்கான ஸ்ட்ராடஃஜிக் அணுகுமுறையாகும், இது அதன் பணியாளர்களின் உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது.
கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் மனித மூலதன மேலாண்மை (HCM) நிறுவனமான இன்டிக்ரா, கார்பொரேட் நிறுவனங்களுக்கான மனித மூலதன மேலாண்மை (HCM) சார்ந்த சேவைகளை மிகத்திறம்பட செயலாற்றி வருகிறது.
இன்டிக்ரா (INTIGRA) நிறுவனத்தின் தலைவர் திரு கணேஷ்குமார் அவர்களுடனான ஒர் உரையாடலின்போது மனித மூலதன மேலாண்மை (HCM) பற்றியும் இன்டிக்ரா நிறுவனத்தின் செயல்பாடுகள் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.
“தொழில்நுட்பத்தால் இயங்கும் உலகில், சந்தை இயக்கவியல் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது, எந்த நிறுவனமும் நிலைத்திருக்கவும் வளரவும் மாற்றங்களுடன் சீரமைப்பது முக்கியம். அதன் உள் திறன்களை தொடர்ந்து மேம்படுத்துவது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு முக்கிய தேவையாக மாறியுள்ளது. ஆட்சேர்ப்பு மற்றும் தேர்வு, பணியாளர் மேம்பாடு, செயல்திறன் மேலாண்மை, இழப்பீடு மற்றும் நன்மைகள் மற்றும் திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை நாங்கள் வழங்கி வருகிறோம்.
உங்கள் நிறுவனம் வழங்கும் மற்ற சேவைகள் பற்றி ?
மனித மூலதன மேலாண்மையோடு (HCM), நிறுவன மேம்பாடு ஆலோசனை (Organaisational Development), ஆட்சேர்ப்பு செயல்முறை அவுட்சோர்சிங் (Recruitment Process Outsourcing), ஒப்பந்த பணியாளர்கள் ஆலோசனை (Contract Staffing), ஊதியம் & இணக்கம் Payroll & Compliance, மனிதவள ஆட்டோமேஷன் (Human Resources Automation), சமூக ஊடக மேலாண்மை (social media management) ஆகிய சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.
எப்பொழுது இந்த HCM என்ற கான்செப்ட் உருவானது?
1990 களில் HCM என்ற கான்செப்ட் உருவானது, பணியாளர்கள் நிறுவனங்களுக்கு ஒரு மதிப்புமிக்க சொத்தாக உள்ளனர், மேலும் அவர்களை திறம்பட நிர்வகிப்பது நிறுவன வெற்றிக்கு பங்களிக்கும். மனித மூலதனம் என்பது நிறுவனத்திற்கு அதன் மதிப்பை அதிகரிப்பதற்காகவும் அபிவிருத்திசெய்வதற்க்காகவும் செய்யக்கூடிய ஒரு முதலீடு என்பதே HCMன் முக்கிய நோக்கம் .
மனித மூலதன மேலாண்மை (HCM) க்கும் மனித வள மேலாண்மைக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்று சிறிது விளக்குங்கள்?
நீண்ட காலக் கண்ணோட்டம், பணியாளர்கள்
முதலீடுகளாக உருவாக்கப்படுகிறார்கள்
நெறிமுறைகளை உருவாக்கி
செயல்திறன் அடிப்படையில் மதிப்பிடப்பட்டது
நிறுவனத்தின் மதிப்பை அதிகரிப்பதே குறிக்கோள்
சமூகப் பொறுப்பு எனும் அடிப்படையில் இயக்கபடுகிறது.
பணியாளர்கள் வளங்களாக
குறுகிய கால முன்னோக்கு
செலவு மையமாக பார்க்கப்படுகிறது
நெறிமுறைகளைப் பின்பற்றுதல்
வேலை மதிப்பீட்டிற்காக மதிப்பிடப்பட்டது
HCM மூலம் பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் எப்படி பயன்பெருகிறது?
பணியாளர்களுக்கான நன்மைகள்:
பணியாளர் வாழ்க்கைச் சுழற்சியை திறம்பட நிர்வகித்தல்
கற்றல் மற்றும் மேம்பாடு
பணியாளர் ஈடுபாடு
நலன்புரி நடவடிக்கைகள்
நிறுவனங்களுக்கான நன்மைகள்:
மனிதவளத்திற்க்கான பட்ஜெட் & மனித முதலீடு மேலாண்மை
உற்பத்தித்திறன் பகுப்பாய்வு
மறுசீரமைப்பு மேலாண்மை
அறிவாற்றலை கட்டமைப்பது
உங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக நீங்கள் கருதுவது என்ன?
நாங்கள் நிரூபிக்கப்பட்ட அணுகுமுறை மூலம் நிறுவனங்களுடன் கைகோர்த்து. அதன் உள் திறன்களை மேம்படுத்துவதற்கான யுக்திகளை வழங்கிவருகிறோம். அதோடு தொழில் உலகத்தில் நாங்கள் பயனுள்ள, புதுமையான மற்றும் திறமையான மனித மூதலீடு மேலாண்மை மற்றும் நிறுவன வளர்ச்சி ஆலோசனை நிறுவனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே இன்டிக்ராவின் மிக முக்கிய நோக்கமாகும் என்றார் உறுதியாக.
Read this in English