சென்னையில் நடக்கவிருக்கும் ஒலிம்பியாட் செஸ் 2022ன் செஸ் போட்டிகள் முதன்முறையாக தமிழகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டீசரை நேற்று ஜூலை 15 சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். எ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்த டீசரை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கிறார்.
28 ஜூலை, 2022 துவங்கி ஆகஸ்ட் 10 ம் தேதி வரை நடக்கும் இந்த போட்டிகளின் விழாவிற்கு பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் முதல்வர் திரு ஸ்டாலின் அவரிகள்.