- வாணர்குலத்து வல்லவரையன் வந்தியத்தேவன்
- அருள்மொழி வர்மன் என்கிற இராசராச சோழர்
- ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன்
- குந்தவை பிராட்டியார்(சுந்தரசோழரின் மகள்,)
- பெரிய பழுவேட்டரையர்
- நந்தினி
- சின்ன பழுவேட்டரையர்
- ஆதித்த கரிகாலர்
- சுந்தர சோழர்
- செம்பியன் மாதேவி
- கடம்பூர் சம்புவரையர்
- சேந்தன் அமுதன்
- பூங்குழலி
- குடந்தை சோதிடர்
- வானதி
- மந்திரவாதி ரவிதாஸன்(பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன்)
- கந்தமாறன்(சம்புவரையர் மகன்)
- கொடும்பாளூர் வேளார்
- மணிமேகலை(சம்புவரையர் மகள்)
- அநிருத்த பிரம்மராயர்
- மதுராந்தக சோழர்
வந்தியத்தேவன், அருண்மொழிவர்மன், ஆதித்தகரிகாலன் குந்தவை, நந்தினி, ஆழ்வார்கடியன் நம்பி, பழுவேட்டரையர், சுந்தரசோழன், உத்தமசோழன், விஜயலையசோழன், மதுரந்தகர், மந்தாகினி தேவி, பூங்குழலி..
தமிழ் இலக்கிய உலகின் மிகச்சிறந்த பொக்கிஷமாக விளங்கும் படைப்பு பொன்னியின் செல்வனின் கதை மாந்தர்களில் சிலரின் பெயர்களே மேலே குறிப்பிட்டவை.
தமிழ் எழுத்தர்களில் குருவாக இருப்பவர்கள் பலர் உண்டு ஆனால் பிதமகர்களின் வரிசையில் முதன்மையான ஆளுமை எழுத்தாளர் திரு. கல்கி கிருஷ்ணமூர்த்தி, அவர்களால் எழுதப்பட்ட சரித்திர நாவல்தான் பொன்னியின் செல்வன், 29 October 1950 to 16 May 1954 4 வருடங்கள் கல்கி இதழில் வெளிவந்து பல்வேறு பதிப்பகங்களில் பல பல பதிப்புகள் கண்டு இன்றும் வாசகர்களால் கொண்டாடப்பட்டு . தற்போது திரைபடமாக வெளிவர இருக்கிறது.
திரைப்படங்களில் மிக பிரம்மாண்டமாக தயரிக்கப்படும் படங்களை ‘மேக்னம் ஒபஸ்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள் நாவல்களில் ‘மேக்னம் ஒபஸ்’ பொன்னியின் செல்வன் ,
பல சரித்திரங்கள் நாவல்கலாக, மாறி இருக்கிற்து, ஒரு நாவலே சரித்திரமாக மாறி இருப்பது பொன்னியின் செல்வன்தான்,
தனது பெரும் எழுத்தாற்றலும், பரந்துபட்ட சிந்தனையும், கற்பனை திறனும், கதாபாத்திர வடிவமைப்பும், உணர்வுகளும், நுணுக்கங்களும், கதை சொல்லும் யுக்தியுமாய் கலந்து ஒர் உயிர்ப்பான நாவலாக எழுதி அசத்தி இருக்கிறார் கல்கி.
தன் மந்திர எழுத்தில் வாசகர்களை கதா பாத்திரங்களோடு உண்டு உறங்கி, காதலில் கிறங்க வைத்து, அன்பில் நனையவைத்து, அச்சப்படவைத்து, மகிழ்ச்சியை உணரச்செய்து குதிரையில், கடலின் நடுவில், பெரும் கப்பலில், புயலில் பயணிக்க வைத்து சோழ பேரரசராக நம்மை நாமே முடிசூடிகொள்ள செய்து. ஆண்களை வந்தியத்தேவனாகவும், அருள்மொழிவர்மனாகவும், பெண்களை குந்தவை, நந்தினியாகவும் மாற்றி ஒர் கற்பானா லோகத்தில் சஞ்சரிக்க வைத்தவர் கல்கி.
வரலாறு
இராஜராஜ சோழனுக்கு அருள்மொழிவர்மன் என்பதே உண்மையான பெயர் கல்வெட்டுக்களில் காணப்படுவது இராஜகேசரி வர்மன் அல்லது மும்முடி சோழ தேவன் உள்ளிட்ட எராளமான பட்டபெயர்கள் உண்டு ஆனாலும் அதில் குறிப்பிடத்தக்க ஒரு பெயர் பொன்னியின் செல்வன் என்பது,
கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் ஆட்சி புரிந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு அந்த காலகட்டத்தில் வாழ்ந்த கதாபாத்திரங்களின் வழியே சில வரலாற்று சம்பவங்களின் பின்னனியில் இந்த புதினத்தை எழுதினார் கல்கி. புது வெள்ளமாக துவங்கும் முதல் பாகத்திலிருந்து சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாக, 300 க்கும் மேற்ப்பட்ட அத்தியாங்களோடு காதல், வீரம், பாசம், துரோகம், நட்பு, மகிழ்ச்சி, நகைச்சுவை, அச்சம், ஏமாற்றம், வஞ்சகம், விஸ்வாசம் என்று அனைத்து மனித உணர்வுகளையும், சம்பவங்களின் ஊடே எழுத்தை சரித்திரமாக்கி எழுத்ப்பட்ட நாவல்.
பொன்னியின் செல்வனை வாசித்த வாசகர்கள், திரை படைப்பாளர்கள், கலைஞர்கள், எழுததாளர்கள், அனைவருக்கும் ஒர் கனவுண்டு, அவரவர்களின் மனத்திரையில் ஒடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் காவியத்தை வெள்ளித் திரையில் காண்பது,
எம் ஜி ஆர், கமலஹாசன் முதல் பலரால் திரைப்படமாக்க முயன்று இன்று மணிரத்னம் அவர்களால் அந்த கனவு மெய்யாவது வார்த்தைகளால் விவரிக்க முடியாத மகிழ்ச்சி.
திரைப்படங்களில் அழகுணர்ச்சியையும், மனித உணர்வுகளையும், சம்பவங்களையும், தனது திறமையான மேக்கிங்கில், காட்சிப்படுத்துவதிலும் பார்வையாளர்களை பரவசப்படுத்தி தன்னகத்தே ஈர்க்கும் வல்லமை மணிரத்னத்திற்க்கு உண்டு. சரித்திர பின்னனியில் சில பாடல்களை உருவாகியிருக்கிறார் அந்த சில பாடல்களில் காட்சிபடுத்திய விதம் கண்களையும் மனதையும் மயங்கச்செய்யும். உதாரணம் “சுந்தரி கண்ணால் ஒரு சேதி”
கர்ணன், துரியோதனன் நட்பை தளபதியாகவும், ராமாயனத்தை ராவணனாகவும் புராணங்களை நவீன திரைவடிவமாக உருவாக்கியிருக்கிறார்.
தனது முதல் சரித்திர திரைப்படமே பொன்னியின் செல்வனாக இருப்பது அவருக்கு பெருமை. தமிழனின் பெருமையை உலகுக்கு சொல்லும் பொன்னியின் செல்வன் “மேக்னம் ஒபஸாக” .