Bell & Ross Men’s Limited Edition Rafale French Fighter Jet Watch BR0394-RAFALE-CE
சமீபத்திய அரசியல் நிகழ்வில் ரஃபேல் கைகடிகாரம் ஒர் புயலை கிளப்பியுள்ளது. “ரஃபேல்” என்ற பிரென்ச் சொல்லுக்கு “புயல்” என்று அர்த்தம்.
ரஃபேல் போர் விமானத்தின் பெருமையை எடுத்துசொல்லும் நோக்கத்தின் கீழ் பெல் & ராஸ் (Bell & Ross) என்ற வடிவமைப்பாளர்கள், தொழில்முறை விமானிகள் தங்கள் திறமைகளை ஒன்றிணைத்து ரஃபேல் ஸ்பெஷல் எடிஷன் வாட்ச்சை டசால்ட் (Dassault ) நிறுவனம் தயாரித்தது.
ரஃபேல் கடிகாரத்தின் வடிவமைப்பு, போர்விமானத்தின் காக்பிட் பேனலில் தெரியும் அதே அடிப்படை வடிவமைப்புக் கொண்டது மற்றும் ரஃபேலின் BR 03-94 ரக வாட்ச்சின் கேஸ் விண்வெளித் துறையில் பயன்படுத்தப்படும் செராமிக் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது.
ராக்கெட்டுகளுக்கான வெப்பக் கவசங்கள் வடிவமைப்பில் செராமிக் பயன்படுத்தப்படுகிறது மற்றும் வல்லுநர்களின் கூற்றுப்படி வைரத்தைப் போலவே கடினமானதாகக் கருதப்படுகிறது. இலகுவானது மற்றும் வெப்பக் கட்டுப்பாட்டு பண்புகளைக் கொண்டுள்ளது, தீவிர நிலைமைகளைத் தாங்கும் திறன் கொண்டது.
பிரத்தியோகமாக 500 கடிகாரங்கள் மாட்டுமே உருவாக்கப்பட்ட ரஃபேல் கடிகாரம், ஜூன் 2015 இல் பிரான்சில் நடைபெற்ற சர்வதேச பாரிஸ் விமான கண்காட்சியில் Le Bourget இல் அறிமுகப்படுத்தப்பட்டது.