தமிழ்நாட்டில் இயங்கி வரும் சாய்ரீ என்ற நிறுவனம் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை கொண்டு முற்றிலும் இயற்கை முறையில் (Natural Bath Soap) குளியல் சோப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
குளியல் சோப்புகள் தயாரிப்பு
மற்றும் அதன் விற்பனை வாய்ப்பு பற்றி அதன் நிறுவனர் திரு. ரமேஷ் கூறியதாவது.,
குளியல் சோப்புகளை தயாரிக்க அதன் ஆரம்ப படிநிலையில் (from scratch) இருந்தே வேலை செய்கிறோம். குளியல் சோப்புகளை உருவாக்க முதலில் தரமான மூலப்பொருட்களை கொள்முதல் செய்கிறோம்.
தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், மற்றும் தேவையான அளவு காஸ்டிக் சோடா சேர்த்து நன்றாக கலந்து சோப்புகளுக்கான அச்சுக் குழியில் ஊற்றப்பட்டு 48மணிநேர காத்திருப்புக்கு பிறகு அச்சிலிருந்து எடுக்கப்படுகிறது.
மேலும் 25 நாட்கள் காற்றோட்டமான சூழலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பிறகு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
பெரும்பாலும் வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப (Customized Soap) சோப்புகள் உருவாக்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் சருமத்தின் தன்மையை பொறுத்து அவர்களே விரும்பி கேட்கும் மூலிகை கலவை மற்றும் மணம் சேர்த்து குளியல் சோப்புகள் தயாரித்துக் கொடுக்கிறோம்.
இயற்கை முறையில் (Handmade soaps) கைகளால் தயாரிக்க கூடிய குளியல் சோப்புகளுக்கு உலகளாவிய அளவில்மிகுந்த வரவேற்பு உள்ளது.
எங்களிடம் அதிகம் விற்பனையாகும் சோப்புகள் :
1) கரித்துகள் சோப்பு
2) குப்பைமேனி சோப்பு
3) கஸ்தூரி மஞ்சள் சோப்பு
4) ஆவாரம்பூ சோப்பு
5) கற்றாழை சோப்பு
எங்களது சோப்புபெட்டிகள் முற்றிலும் எளிதில் மட்கிப் போகும் காகிதத் தாள்களில் மட்டுமே தயாரிக்கப் படுகிறது. சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிக்கும் பாலித்தீன் சோப்புக் கவர்கள் நாங்கள் உபயோகிப்பது இல்லை.
தற்போது Amazon வெப்சைட்டில் எங்கள் இயற்கை குளியல் சோப்பு மற்றும் அது சார்ந்த பொருட்கள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.