ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய்யின் 67வது திரைபடத்தில் நடிக்கும் நடிகர்கள் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரு பெரும் ஸ்டார்காஸ்ட் உள்ள இந்த படத்திற்கு அநிருத் இசையமைக்கிறார்.,லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரிஷா, அர்ஜூன், மஞ்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், இந்தி நடிகர் சஞ்சை தத், மலையாள நடிகர் மேத்யு தாமஸ் ஆகியோர் நடிக்கும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ சார்பில் ஜெகதிஷ் பழனிசாமி மற்றும், லலித் குமார் இணைந்து தயாரிக்கிறார்கள்.