இந்தியாவின் 2026-27-ம் நிதியாண்டுக்கான யூனியன் பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பிப்ரவரி 1, 2026 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் ஆகும்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
இந்த ஆண்டு பட்ஜெட் முக்கியமாக ஆறு அம்சங்களில் கவனம் செலுத்துகிறது:
- பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்துதல்.
- இளைஞர் மற்றும் மனித வள மேம்பாடு.
- சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி.
- உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு.
- புதிய தலைமுறை சீர்திருத்தங்கள்.
- நிதி ஒழுக்கம் மற்றும் மேலாண்மை.
முக்கிய அறிவிப்புகள் மற்றும் திட்டங்கள்
1. இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு:
இளைஞர்களின் சக்தியை (Yuva Shakti) முன்னிறுத்தி இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
- பயோ பார்மா சக்தி: மருந்து உற்பத்தித் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ₹10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- திறன் மேம்பாடு: அடுத்த சில ஆண்டுகளில் 1.5 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டம்.
2. மகளிர் மற்றும் சமூக நலன்:
- ஷீ மார்ட் (SHE Mart): கிராமப்புறப் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க இந்தச் சில்லறை விற்பனை நிலையங்கள் தொடங்கப்படும்.
- மகளிர் விடுதிகள்: பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாடு முழுவதும் மாவட்டந்தோறும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும்.
3. உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து:
போக்குவரத்துத் துறைக்கு அதிகபட்சமாக ₹5.98 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- புதிய நீர்வழித்தடங்கள்: அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய உள்நாட்டு நீர்வழித்தடங்கள் உருவாக்கப்படும்.
- அதிவேக ரயில் பாதை: சென்னை – பெங்களூரு மற்றும் ஹைதராபாத் இடையே அதிவேக ரயில் பாதை அமைக்கும் பணிகள் வேகம் பெறும்.
4. விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு:
- பிஎம் குசும் 2.0: விவசாயிகளுக்குச் சூரிய சக்தியில் இயங்கும் பம்புகளை வழங்க இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
- தேங்காய் ஊக்குவிப்பு திட்டம்: தமிழ்நாடு போன்ற தேங்காய் அதிகம் விளையும் மாநிலங்களில் உற்பத்தியை அதிகரிக்கப் புதிய திட்டம் அறிமுகம்.
வரி மற்றும் விலை மாற்றங்கள்
மக்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, தனிநபர் வருமான வரி விகிதங்களில் பெரிய மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. இருப்பினும், 2025-ம் ஆண்டின் புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதால் வரி நடைமுறைகள் எளிமையாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| விலை குறையும் பொருட்கள் | விலை உயரும் பொருட்கள் |
| 17 வகை புற்றுநோய் மருந்துகள், எக்ஸ்ரே இயந்திரங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான உதிரிபாகங்கள். | வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடம்பர மருத்துவக் கருவிகள். |
| மொபைல் போன்கள் மற்றும் உதிரிபாகங்கள், டிஜிட்டல் கேமராக்கள், CCTV, | சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள், பான் மசாலா மற்றும் குட்கா |
| மின்சார வாகன பேட்டரிகள் | குறிப்பிட்ட வகை கனிமங்கள் (இரும்பு, நிலக்கரி) |
| சோலார் பேனல்கள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான (EV) லித்தியம்-அயன் பேட்டரிகள். | வெளிநாட்டு மதுபானங்கள் |
| தங்கம், வெள்ளி மற்றும் செம்பு (Copper) போன்ற முக்கியமான கனிமங்கள். | இரும்பு, எஃகு (Steel) மற்றும் அலுமினியம் ஸ்கிராப். |
2026-ம் ஆண்டுக்கான இந்த பட்ஜெட், நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிச் சலுகைகள் பெரிய அளவில் வழங்கவில்லை குறிப்பாக உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்துள்ளது.






Leave a Reply