இந்திய விளையாட்டுத் துறை வணிகம் ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த விளையாட்டுச் சந்தை மதிப்பு முதன்முறையாக 2 பில்லியன் டாலர் (சுமார் ₹18,864 கோடி) எனும் பிரம்மாண்ட இலக்கைக் கடந்து அசத்தியுள்ளது.
WPP மீடியா நிறுவனம் வெளியிட்டுள்ள ‘Sporting Nation’ அறிக்கையின்படி, கடந்த ஆண்டை விட இந்திய விளையாட்டுத் துறை வணிகம் 13.4% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதில் வியக்கத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த மொத்த வருவாயில் கிரிக்கெட் விளையாட்டின் ஆதிக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் 89 சதவீதமாக உயர்ந்துள்ளது.

விளம்பரங்கள், ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமம் என அனைத்துத் தளங்களிலும் கிரிக்கெட் தனது பிடியை இறுக்கியுள்ளது. குறிப்பாக ஐபிஎல் மற்றும் மகளிர் பிரீமியர் லீக் தொடர்களின் வெற்றி, இந்த வணிக வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
அதேநேரம், கிரிக்கெட் அல்லாத கால்பந்து, கபடி மற்றும் தடகளம் போன்ற பிற விளையாட்டுகள் மீதமுள்ள 11 சதவீத சந்தைப் பங்கையே கொண்டுள்ளன. உலக அளவில் இந்தியா ஒரு விளையாட்டு வல்லரசாக உருவெடுத்து வரும் நிலையில், இந்த 2 பில்லியன் டாலர் வணிக மைல்கல் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
#SportsBiz #Cricket #Economy #India #WPPReport



Leave a Reply