சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய வரலாறு படைத்துள்ளது. வெளியான 18 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ.800 கோடிக்கும் அதிகமான வசூலை (சுமார் ரூ.807+ கோடி) எட்டி, தமிழ் சினிமா வரலாற்றில் இந்த மைல்கல்லை எட்டிய முதல் திரைப்படம் என்ற மாபெரும் சாதனையைப் பெற்றுள்ளது.

முதல் பாகமான ‘ஜெயிலர்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அதன் தொடர்ச்சியாக வந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்துள்ளது. ‘டைகர்’ முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்தின் ஸ்டைலான நடிப்பும், அதிரடி திருப்பங்களும் திரையரங்குகளை அதிரவைத்து வருகின்றன. இவற்றுடன் மோகன்லால், சிவராஜ்குமார், எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் இணைவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. அனிருத்தின் பின்னணி இசையும் பாடல்களும் திரையரங்குகளில் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளன.

இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.533 கோடிக்கும் அதிகமான கிராஸ் வசூலைக் குவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா-தெலங்கானா ஆகிய அனைத்து முக்கிய தென்னிந்திய சந்தைகளிலும் தனித்தனியே ரூ.60 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய வணிகச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. மேலும், வெளிநாடுகளிலும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் உலகளாவிய சினிமா சந்தையில் தமிழ்த் திரையுலகின் கம்பீரத்தை உயர்த்திப் பிடிந்துள்ளது.

தங்கள் திரைப்பயணத்தின் வாயிலாகவும், அசுரத்தனமான வசூல் வேட்டையின் மூலமாகவும் பாக்ஸ் ஆபிஸின் உண்மையான ‘பாட்ஷா’ என்பதை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் நிரூபித்துள்ளார். தொடந்து வெற்றிகரமாக ஓடிவரும் இத்திரைப்படம் தமிழ் சினிமா உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

Share.
Leave A Reply