Save 20% off! Join us newsletter and get 20% off for premium content!

அமெரிக்காவின் சமையல் உலகில் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான“ஜேம்ஸ் பியர்ட் விருது” (James Beard Award) செஃப் விஜய் குமார் வென்றார்!

அமெரிக்காவின் உணவுலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் ஜேம்ஸ் பியர்ட் விருதுகள் (James Beard Awards) 2025 சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் “நியூயார்க் மாநிலத்தின் சிறந்த செஃப்” (Best Chef: New York State) என்ற மதிப்புமிக்க விருதை, தமிழகத்தை சேர்ந்த செஃப் விஜய் குமார் வென்றுள்ளார், நியூயார்க் நகரில் அமைந்துள்ள ‘செம்மா’ (Semma) என்ற புகழ்பெற்ற தென்னிந்திய உணவகத்தின் தலைமை செஃப் ஆக (Executive Chef) பணிபுரிகிறார்.

செஃப் விஜய் குமார், தனது சமையல் மூலம் தமிழ்நாட்டின் பாரம்பரிய செட்டிநாடு சமையல் சுவைகளையும், தென்னிந்திய உணவு வகைகளையும் உலக அரங்கில் கொண்டு சென்றுள்ளார். அவரது ‘செம்மா’ உணவகம், அமெரிக்காவில் வாழும் உணவுப் பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, தென்னிந்திய உணவுப் பாரம்பரியத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.

இந்த வெற்றி வெறும் ஒரு தனிநபரின் சாதனை மட்டுமல்லாமல், தமிழ் சமையல் கலை மற்றும் பாரம்பரிய உணவுகளுக்கு உலக அரங்கில் கிடைத்த ஒரு மிகப்பெரிய அங்கீகாரமாகும்.

வேட்டி அணிந்து, உணர்ச்சிப்பூர்வமாக அவர் ஆற்றிய ஏற்புரை சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரையும் கவர்ந்துள்ளது.

ஜேம்ஸ் பியர்ட் விருதுகள்: உணவு உலகின் “ஆஸ்கார்”

அமெரிக்காவின் உணவு மற்றும் பானத் துறையில் சிறந்து விளங்கும் வல்லுநர்களை அங்கீகரிக்கும் நோக்கில் ஜேம்ஸ் பியர்ட் அறக்கட்டளை (James Beard Foundation) ஆண்டுதோறும் வழங்கும் மிக உயரிய விருதுகளாகும் ஜேம்ஸ் பியர்ட் விருதுகள் . இவை பரவலாக “உணவு உலகின் ஆஸ்கார் விருதுகள்” (Oscars of the food world) என்றே அழைக்கப்படுகின்றன.

செஃப் விஜய் குமார், தனது சமையல் மூலம் தமிழ்நாட்டின் பாரம்பரிய செட்டிநாடு சமையல் சுவைகளையும், தென்னிந்திய உணவு வகைகளையும் உலக அரங்கில் கொண்டு சென்றுள்ளார். அவரது ‘செம்மா’ உணவகம், அமெரிக்காவில் வாழும் உணவுப் பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, தென்னிந்திய உணவுப் பாரம்பரியத்திற்கு ஒரு

‘செம்மா’ உணவகம், தி நியூயார்க் டைம்ஸின் (The New York Times) 100 சிறந்த உணவகங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன், தற்போது நியூயார்க் நகரில் மிச்செலின் நட்சத்திரம் (Michelin star) பெற்ற ஒரே இந்திய உணவகம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்த சாதனையை அது தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.புதிய பரிமாணத்தை அளித்துள்ளது.

செஃப் விஜய் குமார் தலைமையிலான ‘செம்மா’ உணவகம், சிண்டன் பாண்டியா (Chintan Pandya) மற்றும் ரோனி மஜும்தார் (Roni Mazumdar) ஆகியோரால் நடத்தப்படும் அனபாலஜடிக் ஃபுட்ஸ் (Unapologetic Foods) குழுமத்தின் ஒரு பகுதியாகும். 2021 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, இது பாரம்பரிய இந்திய உணவுகளை சிறந்த உணவு விடுதி மெனுக்களில் (fine dining menus) எவ்வாறு வழங்கலாம் என்பதற்கு புது வடிவம் கொடுத்தது

பிராண்ட்தமிழா (Brandtamizha) செஃப் விஜய் குமாரின் இந்த மகத்தான வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.