Save 20% off! Join us newsletter and get 20% off for premium content!

ஸ்டார்டப் நிதி திரட்டுதல்-க்கான வெற்றிகரமான Pitch Deck தயாரிப்பது எப்படி?

ஒரு முதலீட்டாளரை ஈர்க்கும் கலை

உங்கள் ஸ்டார்ட்அப்பை வளர்க்கவும், உலகிற்கு உங்கள் கனவை வெளிப்படுத்தவும், முதலீடு தேவைப்படுவது இயல்பான விஷயம். ஆனால் எந்த ஒரு முதலீட்டாளரும், உங்கள் கனவுகளை நம்பி பணம் இட Pitch Deck இல்லாமல் முடியாது.
Pitch Deck என்பது உங்கள் ஸ்டார்ட்அப்பின் CV போல — அது உங்கள் யோசனையை, சந்தையை, அணியை, வளர்ச்சி திட்டங்களை மிகவும் தெளிவாகவும், நம்ப வைக்கும் விதமாகவும் கூற வேண்டிய ஒன்று.

இங்கே ஒரு வெற்றிகரமான Pitch Deck உருவாக்குவதற்கான முக்கியமான கட்டங்கள் உள்ளன:

1. Cover Slide – அழுத்தமான முதல் பக்கம்

  • Startup பெயர்
  • Tagline (உங்கள் business-ன் soul)
  • Logo & visually appealing design
  • Founder contact info (email, phone)

Bro Tip: முதலீட்டாளரின் நம்பிக்கையை 10 வினாடிகளில் பிடிக்க வேண்டியது இது!

2. Problem – நீங்கள் தீர்க்க போகும் பிரச்சனை

  • சந்தையில் உள்ள உண்மையான, கணிசமான பிரச்சனை என்ன?
  • யார் அதை எதிர்கொள்கிறார்கள்?
  • Current solution-கள் ஏன் குறைவாக உள்ளன?

Real-world example கொடுப்பது பெரும் தாக்கம் ஏற்படுத்தும்.

3. Solution – உங்கள் Magic Product/Service

  • உங்கள் solution எவ்வாறு வித்தியாசமாகவும் சிறப்பாகவும் உள்ளது?
  • ஒரு சுருக்கமான demo image/video/mockup சேருங்கள்.

🎯 சிக்கலான tech விளக்கங்களை தவிர்த்து, எளிமையாக கூறுங்கள்.

4. Market Opportunity – எவ்வளவு பெரிய சந்தை?

  • TAM (Total Addressable Market)
  • SAM (Serviceable Available Market)
  • SOM (Serviceable Obtainable Market)
  • Market growth rate, potential scale

உங்கள் startup-க்கு ‘scalable’ என்று சாட்சியமாகவும், தரவுகளோடு விளக்குங்கள்.

5. Business Model – Revenue எப்படி வரும்?

  • உங்கள் primary revenue source என்ன?
  • Pricing structure, Subscription, Commission, Freemium?
  • LTV vs CAC (Lifetime Value vs Customer Acquisition Cost) overview

உண்மையான unit economics தெரியாமலே funding கேட்பது தவறு.

6. Traction – என்ன வெற்றிகள் கிடைத்துள்ளன?

  • Users, revenue, downloads, conversions
  • Strategic partnerships
  • Testimonials or media mentions

எண்ணிக்கைகள் பேசட்டும். இதுதான் உங்கள் credibility!

7. Go-to-Market Strategy – சந்தையில் வெல்வது எப்படி?

  • Marketing & Sales Plan
  • Digital Strategy, Influencer collaboration
  • Distribution Channels

“ஒரே app போட்டா viral ஆகும்” மாதிரி vague ideas-ஐ தவிர்க்கவும்.

8. Competition – யாருடன் போட்டி?

  • Competitor Matrix
  • உங்கள் USP என்ன?
  • Barrier to entry & differentiation

Honest competition analysis, self-awareness காட்டும்.

9. Team – உங்கள் திறமையான வீரர்கள்

  • Founders & Key Team Members
  • Relevant experience & skills
  • Advisory board (if any)

“Idea”க்கு பின்னால் உள்ள “Execution Team”ஐ முதலீட்டாளர்கள் முக்கியமாக பார்க்கிறார்கள்.

10. Financials – எண்ணிக்கைகள் பேசட்டும்

  • 3-5 years projection (Revenue, Expenses, EBITDA)
  • Break-even point
  • Funding Usage breakdown

Realistic figures + conservative estimates = trust.

11. Ask – எவ்வளவு முதலீடு தேவை?

  • எவ்வளவு தொகை?
  • Equity percentage
  • Fund utilization plan

“Why Now?” என்பதையும் தெளிவாக சொல்லுங்கள்.

அடிக்கடி செய்யப்படும் தவறுகள்

  • Too much text – படிக்க யாருக்கும் நேரமில்லை
  • No story – Emotional connect இல்லாத pitch
  • Over-valuation without traction
  • Technical jargons overload