Save 20% off! Join us newsletter and get 20% off for premium content!

தமிழ்நாடு பட்ஜெட் 2026:

முக்கிய தகவல்கள் மற்றும் துறைவாரி அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-2027 நிதி ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெற்ற முதன்மையான நிதியியல் விவரங்கள், திட்டங்கள் மற்றும் துறைவாரி ஒதுக்கீடுகள்.

நிதி நிலைமை & பொருளாதார தரவுகள்

  • மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP): ₹40,67,312 கோடி.
  • மொத்த வருவாய் வரவு: ₹3,50,027 கோடி.
  • வருவாய் பற்றாக்குறை: ₹55,775 கோடி.
  • நிதிப் பற்றாக்குறை: ₹1,21,819 கோடி (GSDP-ல் 3.00%).
  • மொத்தக் கடன்: ₹10,98,400 கோடி (GSDP-ல் 27.01%).
  • வெற்றி மடிக்கணினி திட்டம்: உயர்கல்வி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்க ₹2,000 கோடி.
  • இலவச மின்சாரம்: வீடுகளுக்கான இலவச மின்சாரம் 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டாக உயர்வு (₹1,545 கோடி).
  • விவசாயக் கடன் தள்ளுபடி: 14.43 லட்சம் விவசாயிகளின் கூட்டுறவு வேளாண் கடன்கள் தள்ளுபடி (₹5,932 கோடி).
  • தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் (₹560 கோடி).
  • அண்ணன் சீர் திட்டம்: ஏழை மணப்பெண்களுக்கு திருமண நிதியுதவியாக 1 சவரன் தங்க நாணயம் மற்றும் பட்டுச்சேலை (₹812 கோடி).

துறைவாரி நிதி ஒதுக்கீடு

துறைஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி (₹ கோடிகளில்)
பள்ளித் கல்வி₹44,527
ஊரக வளர்ச்சித் துறை₹39,609
நகர்ப்புற வளர்ச்சித் துறை₹38,715
சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்₹23,357
உணவு மற்றும் கூட்டுறவு₹22,859
நெடுஞ்சாலைத் துறை₹21,524
மின்சாரத் துறை₹15,828
வேளாண்மைத் துறை₹14,984
போக்குவரத்துத் துறை₹13,561
நீர்வளத் துறை₹9,264
உயர்கல்வித் துறை₹8,393

அறிவகம் (AI City): செயற்கை நுண்ணறிவு மற்றும் Deep-tech ஆராய்ச்சிக்கான சிறப்பு மண்டலம்.

விண்வெளி தொழிற்பார்க்: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மண்டலங்களில் Space Industrial Investment Zone.

மின்சாரப் பேருந்துகள்: MTC-க்கு 1,000 புதிய மின்சார குளிர்சாதனப் பேருந்துகள் (e-Buses).