டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன விற்பனை 7 சதவீதம் அதிகரித்தது 43,140 ஆக அதிகரித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் உள்நாட்டு விற்பனையில் (மின்சார வாகனங்கள் உட்பட) ஏழு சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது, ஃபிப்ரவரி மாதம் வரையிலான கணக்கின்படி 43,140 வாகனங்களை விற்பனை செய்துள்ளது இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் 40,181 விற்பனையாக இருந்தது.
அதன் பயணிகள் வாகனங்களின் ஏற்றுமதியும் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 200 இருந்த நிலையில், இந்த மாதத்தில் 39 சதவீதம் அதிகரித்து 278 வாகன விற்பனையாக இருந்தது.
பிப்ரவரி 2022 இல் 33,894 யூனிட்களுடன் ஒப்பிடும்போது, உள்நாட்டு வணிக வாகன விற்பனை கடந்த மாதம் நான்கு சதவீதம் அதிகரித்து 35,144 யூனிட்களாக அதிகரித்துள்ளது என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.