டாடா குழும நிறுவனமான டைட்டன், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதன் முதன்மையான நகை வணிகத்தில் இரண்டரை மடங்கு வளர்ச்சியை இலக்காகக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 ஸ்டோர்களை 300 நகரங்களில் துவங்க திட்டமிட்டுள்ளதாக என்று டைட்டன் நிறுவனம் BSE ல் தாக்கல் செய்த முதலீட்டாளர்களின் விளக்க காட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவின் நகை வியாபார சந்தை ஒரு புதிய பாய்ச்சலுக்கு தயாராக இருப்பதாகவும் இது நகை வியாபாரத்தின் வளர்ச்சிக்கு உகந்த நேரமாக இருப்பதாக டைட்டன் நிறுவனம் தெரிவித்துள்ளது. Tanishq, Mia by Tanishq, Z and Caratlane டைட்டனின் மிக முக்கிய பிராண்டுகளாக விளங்குகிறது.