4 Ps in மார்க்கெட்டிங் : உங்கள் வணிகத்திற்கு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது.
மார்கெட்டிங் ல் 4 Ps என்பது என்ன?
மார்கெட்டிங் ல் 4 Ps – தயாரிப்பு(product) , விலை (price), இடம்(place) மற்றும் விளம்பரம்(promotion) – மார்க்கெட்டிங் கலவை(marketing mix) என்றும் அழைக்கப்படுகிறது, இது எந்தவொரு வணிகத்தின் வெற்றியையும் உறுதி செய்வதற்கு அவசியமான ஒரு பிரபலமான மர்கெட்டிங் யுக்தி.
ஹார்வர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் விளம்பரப் பேராசிரியரான நீல் எச். போர்டன், “மார்க்கெட்டிங் மிக்ஸ்” என்ற சொல்லை உருவாக்கினார்.
தயாரிப்பு பொருள் (product): ஒரு பொருள் அல்லது சேவை.
விலை (price): ஒரு பொருள் அல்லது சேவைக்காக வாடிக்கையாளர் அல்லது நுகர்வோர் செலுத்தும் தொகை.
இடம் (place): நீங்கள் ஒரு பொருளை அல்லது சேவையை சந்தைப்படுத்தும் இடம்.
விளம்பரம் (Promotion): ஒரு பொருளை அல்லது சேவையை எப்படி விளம்பரப்படுத்துகிறீர்கள்.