சமூக ஊடகமான ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் வாங்குகிறார். இந்திய மதிப்பு 33,65,45,00,00,000 !
தற்போதைய ட்விட்டரின் ஒரு பங்கின் மதிப்பு 54.20 டாலர்கள். ட்வ்ட்டரின் தலைமை அதிகரியாக இந்தியரான பரக் அக்ரவால் பணியாற்றி வருகிறார். நிறுவனம் கைமாரியதும் அவர் மாற்றப்படுவார் என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
ஃபோர்ப்ஸ் இதழின் கணிப்பின் படி, மஸ்க் உலகின் மிகப் பெரிய பணக்காரர் அவரின், மதிப்பிடப்பட்ட நிகர சொத்து மதிப்பு 273.6 பில்லியன் டாலர்கள், அவர் நடத்தும் மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவும் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தையும் அவர் வழிநடத்துகிறார்.
ஃபேஸ்புக் நிறுவனத்தோடான தீரா பகையால்.,மற்றொரு சமூக ஊடகத்தை துவங்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் ட்விட்டரை தன்வசமாக்கிகொண்டார்.
இனி விண்வெளி மட்டுமல்ல உலகையும் ஆள்வாரா எலொன் மஸ்க்.