இன்றைய உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி வானளாவி வருகிறது. அதில் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்று ட்ரோன்கள் (Drones). ஆரம்பத்தில் இராணுவ பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இந்த விமானங்களை இன்று வேளாண்மை முதல் சினிமா படப்பிடிப்பு வரை பல துறைகளில் பயன்படுத்துகிறார்கள்.
ட்ரோன் என்றால் என்ன?
ட்ரோன் என்பது தானாக இயங்கக்கூடிய, ரிமோட் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய ஆளில்லா ஒரு சிறிய விமானம். இதைப் பல பெயர்கள் உண்டு : UAV (Unmanned Aerial Vehicle), Quadcopters, Flying Robots என்று.
ட்ரோன்கள் துவங்கியதும் பறந்ததும்
ட்ரோன் என்பது இன்று நம்மை ஆச்சர்யப்படுத்தும் தொழில்நுட்ப சாதனம். ஆனால், அதன் மூலக்கருவான யோசனை 1800-ஆம் ஆண்டு பிற்பகுதியில் தோன்றியது.

ஆரம்ப முயற்சிகள்
1849-ல் ஆஸ்திரியா அரசு வெனிஸைப் படையெடுக்க balloon bombs பயன்படுத்தியது – இதுவே முதல் மனிதரில்லா விமானம் எனக் கருதப்படுகிறது.
சிந்தனையிலிருந்து செயலில்
1916-ல் பிரிட்டிஷ் அறிவியலாளர் ஆர்ச்சிபால்ட் லோ (Archibald Low), “Aerial Target” எனும் ரேடியோகான உள்உறுப்பை கொண்ட விமானம் உருவாக்கினார். இவர் “Father of Radio Guidance Systems” என அழைக்கப்படுகிறார்.
அடுத்து 1918-ல் அமெரிக்காவின் சார்லஸ் கெட்டரிங் (Charles Kettering) உருவாக்கிய “Kettering Bug” எனும் சாதனம் ஒரு முன்னோடி cruise missile போல செயல்பட்டது – இது டிரோன்களின் வளர்ச்சியில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.
நவீன ட்ரோன்கள்

1980-களில் தொடங்கிய அமெரிக்க ராணுவத்தின் ட்ரோன் பயன்பாடுகள், 2010-க்குப் பிறகு பொதுமக்கள் சந்தைக்குள் நுழையத் தொடங்கின. அதற்குப் பெரும் காரணம் சீனாவின் DJI (Da-Jiang Innovations) நிறுவனமும் அதன் நிறுவனர் பிராங்க் வாங் (Frank Wang) என்பவரும்.
இப்போது, வீடியோ படப்பிடிப்பு முதல் விவசாயம், பத்திரப்பதிவு முதல் பாதுகாப்பு வரை — ட்ரோன்கள் நம்மைச் சுற்றியிருக்கும் தொழில்நுட்பக் கண்களாக மாறிவிட்டன.
டிரோன்களின் முக்கிய தொழில்நுட்ப அம்சங்கள்
- GPS நவிகேஷன் – இடம் கண்டறிவதற்கும் வழிநடத்துதலுக்கும்
- HD கேமரா – புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு
- Obstacle Avoidance System – மோதலைத் தவிர்க்கும் செயற்கை நுண்ணறிவு
- Return to Home (RTH)

பயன்பாடுகள் – பல துறைகள், ஒரு தீர்வு
ட்ரோன்கள் ஒரு “ஃபேன்ஸி கேமரா” என்பதைற்கும் மேலாக – பல துறைகளில் சிக்கலான வேலைகளை எளிதாக்கும் புரட்சிகர சாதனம் பயன்படுத்தப்படுகிறது . வரலாற்றில் விமானங்கள் போலவே, ட்ரோன்களும் தங்கள் பயணத்தை பல திசைகளில் இறக்கைகள் விரித்து பறக்கிறது .
வேளாண்மை
வயல் நிலங்களை மேல் இருந்து கண்காணிக்க
உரம் பூச்சிக்கொல்லி தெளிக்க
பயிர் வளர்ச்சி பகுப்பாய்வு செய்ய
சினிமா & மீடியா
“Aerial Photoshoot” வான்வழி புகைப்படம் எடுத்தல்
பறக்கும் காட்சிகளை எடுப்பதற்கான முக்கிய கருவி
இராணுவம் & பாதுகாப்பு
கண்காணிப்பு பணி (Surveillance)
குண்டு அகற்றும் செயலிகள்
விநியோகத் துறை (Delivery)
Amazon, Swiggy போன்ற நிறுவனங்கள் ட்ரோன் டெலிவரி சோதனைகளை ஆரம்பித்துள்ளன
அதிவேக மீட்பு (Disaster Management)
வெள்ளம், நிலநடுக்கம் போன்று பேரிடர்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்காணிக்க என்று பல துறைகளில் முக்கியத்துவம் பெறுகிறது.
சந்தை வளர்ச்சி & வணிக வாய்ப்புகள்
ட்ரோன் சந்தை உலகளவில் 2025க்குள் $60 பில்லியனை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் Startup India மற்றும் Make in India திட்டங்கள் காரணமாக ட்ரோன் நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன, அவற்றில் மிக முக்கியமாக ideaForge, Garuda Aerospace Aarav Unmanned Systems போன்ற நிறுவனங்கள் ட்ரான் தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
எதிர்கால வளர்ச்சி – வானில் வணிகம்!
Smart City Surveillance: நகர கண்காணிப்பு முறைகள் முழுமையாக ட்ரோன்களால்
ட்ரோன் டெலிவரி எக்ஸ்பிரஸ்: உணவு, மருந்துகள் 30 நிமிடத்தில் டெலிவரி
அதிவேக ட்ரோன் ஹைவே: ட்ரோன்களுக்கு தனிச்சிறப்பு வழித்தடங்கள்
“ட்ரோன் தொழில்துறை வேகமாக வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில், நீங்களும் தொடங்கக்கூடிய சில லாபகரமான ட்ரோன் தொழில் வாய்ப்புகள்!”
- ட்ரோன் வாடகை
(Drone Rental Business) - ட்ரோன் படப்பிடிப்பு
(Wedding / Real Estate Photography & Videography) - ட்ரோன் பயிற்சி & சான்றிதழ் அகாடமி
(Drone Training & Certification Academy) - AgriTech ட்ரோன் சேவைகள்
(AgriTech Drone Services) - தொழில்துறை கண்காணிப்பு தீர்வுகள்
(Industrial Surveillance Solutions)
தொடர்ந்து தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பிஸினஸ் உலகத்தின் தகவல்களை Premium தரத்தில் பெற, Brand Tamizha Digital Magazineஐ சந்தா செய்யுங்கள்.






Leave a Reply