அன்றிலா அன்றில் வார்த்தையிலிருந்து உருவானதாகும். அன்றில் பறவை தனது இணையின் மேல் கொண்ட காதல் மற்றும் ஒன்றை விட்டு ஒன்று என்றும் பிரியாதிருப்பதற்காக தமிழ்ச் சங்க காலப் பாடல்கள் முதல் இன்றைய திரையிசைப் பாடல்கள் வரை கொண்டாடப்பட்ட பறவை.
அன்றிலா, அன்றில் பறவையைப் போல தனது வாடிக்கையாளர்களிடமிருந்து என்றும் பிரியாதிருக்கும் என்பது போன்று கருத்துருவாக்கப்பட்டுள்ளது.
“இயற்கையான, உயர் மதிப்புமிக்க பொருட்களை எங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே அன்றிலாவின் முக்கிய நோக்கமாகும்” என்கிறார்கள் இதன் நிறுவனர்களான திரு. ஸ்ரீ ராஜேஷ்வரன் மற்றும் திரு. பிரபு குழந்தைவேல்.
தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அன்றிலா உறுதியாக நம்புகிறது. அன்றிலா தமிழர் நிலத்திணைகளிலிருந்து பொருட்களை வழங்குகிறது. அன்றிலா ஒரு ஐந்திணைப் பொருட்களின் சங்கமமாகும்.
கந்தம் ( Premium Masala & Spices)
கந்தம் என்பது ஒரு தமிழ் வார்த்தை. மசாலாப் பொருட்களின் நறுமணம் என்பது இதன் அர்த்தமாகும்.
எனவே அன்றிலாவின் மாசாலா மற்றும் நறுமணப் பொருட்களின் வணிகப்பெயர் கந்தம் என்று பெயரிடப்பட்டு வர்த்தக முத்திரைப் பதிவு (Trademark Registered) செய்யப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் தர மூலப்பொருட்களைக் கொண்டு இயற்கை முறையில் தயாரிக்கப்படும் மசாலா மற்றும் நறுமணப்பொருட்கள் கந்தம் உயர்தர மசாலா மற்றும் நறுமணப்பொருட்கள் ( Premium Masala & Spices) அன்றிலா.in-ல் கிடைக்கும்.
முருகு ( Premium Herbals)
முருகு என்றால் அழகு, இளமை, பெருமை என்பது போன்ற பொருளாகும். முருகு என்றால் தமிழ்க் கடவுள் முருகனையும் குறிக்கும். முருகு ஒரு அழகான தமிழ்ச் சொல் மற்றும் மெல்லினம், இடையினம் மற்றும் வல்லினம் எழுத்துக்களிலிருந்து முறையே உருவாக்கப்பட்டதாகும்.
அன்றிலாவின் மூலிகை மற்றும் அழகு சாதனப் பொருட்களின் வணிகப்பெயர் முருகு என்று பெயரிடப்பட்டு வர்த்தக முத்திரைப் பதிவு (Trademark Registered)செய்யப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் தர மூலிகைப்பொருட்களைக் கொண்டு இயற்கை முறையில் குழந்தை, பெண்கள் மற்றும் ஆண்களுக்கென தனித்தனியே தயாரிக்கப்படும் குளியல் நலங்கு மாவு மற்றும் சோப்புகள் அன்றிலா.in-ல் கிடைக்கும்.
நெய்லா ( Premium Wood Pressed Oils)
பண்டைய தமிழ் காலத்தில் எண்ணெய்க்கு நெய் என்று பெயர். தமிழர்களால் முதன்முதலாக மாட்டிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்ப் பொருட்களுக்கு அதன் ஒட்டும் தன்மைக்கேற்ப நெய் மற்றும் வெண்ணை என்று பெயர் சூட்டினர்.
பிறகு, எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்ப்பொருளுக்கு எள் + நெய் => எள்நெய் => எண்ணெய் என்று பெயர் பெற்று, அதுவே அனைத்து எண்ணெய்ப்பொருட்களுக்கும் எண்ணெய் என்ற பொதுப்பெயராக மாறியது. காலப்போக்கில் எள்நெய் => நல்ல எண்ணெய் என்று பெயர்பெற்றது. ஆகவே நெய் என்பது தான் எண்ணெய்ப்பொருட்களுக்கு உண்மையான தமிழ் பெயராகும். நெய்லா, நெய் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவாக்கப்பட்டது.
அன்றிலாவின் மரச்செக்கு நெய் பொருட்களின் வணகப்பெயர் நெய்லா என்று பெயரிடப்பட்டு வர்த்தக முத்திரைப் பதிவு (Trademark Registered) செய்யப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் தர மூலப்பொருட்களைக் கொண்டு பாரம்பரிய மற்றும் இயற்கை முறையில் வாகை மரச்செக்கில் தயாரிக்கப்படும் உயர் தர நெய்லா தேங்காய் நெய், கடலை நெய் மற்றும் எள் நெய் அன்றிலா.in-ல் கிடைக்கும்.
நெய்யல் ( Premium Apparels )
நெய்யல் என்பது நூலிலிருந்து ஆடை செய்யும் முந்தைய கால தொழில்நுட்பமாகும். இன்றும் சிலர் கைகளால் நெய்து / நெசவு செய்து வருகின்றனர். அன்றிலாவின் ஆடைப் பொருட்களின் வணிகப்பெயர் நெய்யல் என்று பெயரிடப்பட்டு வர்த்தக முத்திரைப் பதிவு (Trademark Registered) செய்யப்பட்டுள்ளது.
இளம்பிள்ளை, சின்னாளப்பட்டி மற்றும் திருப்பூரிலிருந்து நெய்து வாங்கப்பட்ட உயர் தர ஆடைகள் அன்றிலா.in-ல் கிடைக்கும்.
பொற்சுவை ( Premium Dry Fruits & Nuts)
பொற்சுவை என்ற தமிழ்ச்சொல் சுவைக்கான உவமைச் சொல். பொன் போன்ற சுவையுடைய பொருள் வரும் வண்ணம் இப்பெயர் உருவாக்கப்பட்ட உவமைச் சொல்லாகும்.
அன்றிலாவின் உலர் பழங்கள் மற்றும் பருப்பு வகைகளின் வணிகப்பெயர் பொற்சுவை என்று பெயரிடப்பட்டு வர்த்தக முத்திரைப் பதிவு (Trademark Registered) செய்யப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட உயர் தர உலர் பழங்கள் மற்றும் பருப்புகள் / கொட்டைகள் அன்றிலா.in-ல் கிடைக்கும்.