கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவிட்-19 தாக்கம் இருந்தபோதிலும், 2022 ஆம் ஆண்டில் சிறந்த இந்திய பிராண்டுகள் தங்கள் பிராண்ட் மதிப்புகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்று ப்ரண்ட் ஃபினான்ச் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது .
24 பில்லியன் ப்ராண்ட் மதிப்புடன் இந்தியாவின் மிகப் பெரிய மதிப்புமிக்க ப்ராண்டாக டாடா குழுமம் உருவெடுத்துள்ளது. ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் பொருட்கள், ஹோட்டல், இரும்பு, கட்டுமானம், நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தன்னுடைய வர்த்தகத்தை நிலை நிறுத்தி இந்திய வர்த்தகத் துறையில் முன்னோடியாக திகழ்கிறது.
தன்னுடைய பிஸினஸ் உத்திகள், முன்மாதிரியான நிர்வாக தலைமை, சிறந்த ப்ராண்ட் கட்டமைப்பு ஆகிய செயல்பாடுகளால் உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறது.
இன்ஃபோஸிஸ் $12.8 பில்லியன் ப்ராண்ட் மதிப்போடு 2ஆம் இடத்திலும், எல் ஐ சி $11.1 பில்லியன் ப்ராண்ட் மதிப்போடு மூன்றாம் இடத்திலும் இருப்பதாக ப்ராண்ட் ஃபினான்ஸ் நிறுவனம் மதிப்பிடிருக்கிறது.