நம் ஒரு நாள் எப்படி துவங்கி கழிகிறது என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்,
காலை விழிப்பது முதல் நமக்கும் ப்ராண்டுகளுக்குமான உறவு துவங்கி விடுகிறது ஸ்லீப்வெல் படுக்கையிலிருந்து விழித்துபார்த்தால், நமக்காக அறையை குளிரச்செய்துகொண்டிருக்கும் ப்ளூ ஸ்டார் ஏசி,விழித்துவுடன் நம் கைகள் தேடும் சாம்சங்க் மொபைல் போன். பல் துலக்க கோல்கேட் டூத் பேஸ்ட்டும் ப்ருஷ்ஷும், நேர்மையான ஹமாம் சோப்போடு குளியல், உடல் தழுவும் வைக்கிங்க் உள்ளடைகள், ஆகச்சிறந்த ப்ராண்டுகளின் மேலாடைகள் மணிக்கட்டை அலங்கரிக்க டைமெக்ஸ் கைகடிகாரம் இன்னும் இன்னும் நம் உணவு உடை உறையுள் வரை ப்ராண்டுகளே நம்மை அறியாமலே நம்மை இயக்குகிறது.
ப்ராண்ட் என்றால் என்ன?
பிராண்ட் என்பது ஒரு நிறுவனத்தை அல்லது ஒரு பொருளை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திகாட்டும் அடையாளம். ஒரு பிராண்ட் என்பது பொதுவாக ஒரு பெயர், ஸ்லோகன், லோகோ அல்லது சின்னம், வடிவமைப்பு, இசை இவற்றில் ஒன்றாகவோ அல்லது இவை அனைத்தையும் உள்ளடக்கியதாகவோ இருக்கலாம். ஒரு வணிகத்துடன் தொடர்பு கொள்ளும்போது வாடிக்கையாளர் பெறும் ஒட்டுமொத்த அனுபவத்தையும் (experience) இது குறிக்கிறது.
ப்ராண்டிங்க் எத்தனை முக்கியம்
உங்கள் நிறுவனத்தில் ஒட்டுமொத்த தாக்கத்தை ஏற்படுத்துவதால் வணிகத்திற்கு பிராண்டிங் முற்றிலும் முக்கியமானது. உங்கள் பிராண்டை மக்கள் எப்படி உணருகிறார்கள் என்பதை பிராண்டிங் மாற்றலாம், அது புதிய வணிகத்தை இயக்கலாம் மற்றும் பிராண்ட் மதிப்பை அதிகரிக்கலாம்.
நீங்கள் ஒரு பிசினஸ் மேன் அல்லது பிசினஸ் வுமனாக இருக்கும்பட்சத்தில் உங்கள் வணிகத்திற்க்காகவோ நீங்கள் தயாரிக்கும் பொருட்களுக்காகவோ அல்லது நீங்கள் வழங்கும் சேவைகளுக்காகவோ ப்ராண்டிங்க் செய்வது எப்படி நம் வணிகத்திற்க்கு எப்படி பயன்படுத்துவது என்பதே.