மாருதி சுஸுகி இந்தியாவில் புதிய Alto K10 Xtra எனும் சிறப்பு பதிப்பை அறிமுகப்படுத்த உள்ளது மேலும் இந்த சிறப்பு பதிப்பு ஹேட்ச்பேக் (Hatchback) வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
Alto K10 ஸ்டான்டர்டு மாடலுடன் ஒப்பிடும்போது காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் இரண்டிலும் சில சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
புதிய மாருதி சுஸுகி ஆல்டோ கே10 எக்ஸ்ட்ரா எடிஷனின் வெளிப்புறத்தில் உள்ள சில வடிவமைப்பு மாற்றங்களை பற்றி பார்க்கலாம், சிறப்பு எடிஷன் ஹேட்ச்பேக், பாப்ரிகா ஆரஞ்சு நிற ORVMகள்,
ஸ்பாய்லர் மற்றும் முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட்டுகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது தவிர, சிறப்பு பதிப்பான ஆல்டோ கே10, வீல் ஆர்ச் கிளாடிங்கையும் கொண்டுள்ளது.
புதிய ஸ்வீப்பேக் ஆலசன் முகப்பு விளக்குகளோடு, ஒரு பெரிய முன் கிரில், சில்வர் கவர்கள் கொண்ட ஸ்டீல் சக்கரங்கள், உடல் நிற கதவு கைப்பிடிகள் உட்பட சில முக்கிய மாற்றங்களை கொண்டுள்ளது.