தன் பிறந்த நாளையொட்டி இந்தியாவின் இசைப்புயல் ரஹ்மான் புதிய டிஜிட்டல் தளம் துவங்கியுள்ளார்ம் முழுக்க இசைக்காகவும் இசைக்கலைஞர்களுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தளத்திற்க்கு“கற்றார்” (KATRAAR)என தமிழில் பெயரிடப்பட்டிருக்கிறது.
web3.0, Metaverse தொழில் நுட்பத்தில் உருவாகியிருக்கும் இந்த தளம் இசைக்கலைஞர்களை ஒன்றினைக்கவும் புதிய இசைத்திறமைகளை கண்டரிந்து அவர்களை ஊக்குவுக்கவும்,புதிய திறமையாளர்களுக்கு நீண்ட கால நிலையான வருவாய் மாதிரியை உருவாக்கவும் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
எப்பொழுதும் சமூக ஆர்வத்தோடு சிந்திப்பதோடு மட்டுமல்லாது செயல்படுத்தியும் வரும் இசைப்புயலின் இந்த புதிய துவக்கம் எல்லோராலும் பாரட்டப்பட்டு வருகிறது. மேலும் இந்த தளத்திற்க்கு தமிழில் “கற்றார்” (KATRAAR) என பெயரிட்டு பழங்காலத்தையும், எதிர்காலத்தியும் இணைப்பதை குறிப்பதாக அதன் லோகோவையும் ரோபொவின் கையில் பனையோலை பிடித்திருப்பது போலவும் வடிவமைக்கப்படுள்ளது சிறப்பு.
இணையதள முகவரி : https://katraar.com/