95th Academy Awards
95வது அகாடமி விருதுகள் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) நடத்திய விழா மார்ச் 12, 2023 அன்று லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது.
விருதுபட்டியலில் இந்தியாவின் இரண்டு படைப்புகள்
RRR நாட்டு நாட்டு பாடல்
SS ராஜமௌலி இயக்கி MM கீரவானி இசையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த RRR திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான (Original Song) விருதை வென்றது.
தி எலிபன்ட் விஸ்பரஸ்
மற்றொரு படைப்பான ஆங்கிலத்தில் வெளியான தி எலிபன்ட் விஸ்பரஸ் என்ற ஆவணக் குறும்படத்திற்கு சிறந்த ஆவணக் குறும்படம் விருது வழங்கப்பட்டது இது ஆதரவற்ற யானைக் குட்டிகளை பராமரிக்கும் முதுமலை தம்பதிகளான பொம்மன் மற்றும் வெள்ளி இருவரின் வாழ்க்கை பயணம் யானைகள் உடனான அவர்களுடைய பிணைப்பை அற்புதமாக படமாக்கப்பட்டிருந்தது.
கார்த்திகி கோன்சல்வெஸ் (Kartiki Gonsalves), இயக்கிய இந்த திரைப்படத்தின் கதையை கார்த்திகி யுடன் சேர்ந்து பிரிசில்லா கோன்சல்வெஸ் (Priscilla Gonsalves )மற்றும் கரிமா புரா (Garima Pura Patiyaalvi) ஆகியோர் எழுதிருந்தது குறிப்பிடத்தக்கது.