இந்தியா மட்டுமல்லாது உலக திரை ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் வெளியாகியுள்ளது. நேற்று (06-09-2022) நடந்த வெளியீட்டு விழா நிகழ்சியில் படக்குழுவினரோடு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், உலக நாயகன் கமலஹாசனும் இணைந்து ட்ரைலர் மற்றும் பாடல்களை வெளியிட்டனர்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இரண்டுபாகங்களாக வெளியாகும் பொன்னியின் செல்வன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகிறது.