செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) என்பது இன்று உலகம் முழுவதும் தொழில்துறை, கல்வி, வணிகம் மற்றும் பல துறைகளை மாற்றியமைக்கும் திறனை கொண்ட ஒரு முக்கிய தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ளது. “AI” என்பது ஒரு கணினி அல்லது மென்பொருள், மனிதன் போன்று சிந்திக்கவும், கற்றுக்கொள்ளவும், முடிவெடுக்கவும், பிரச்சனைகளை தீர்க்கவும் செய்யும் திறனை அடையும் முறையை குறிக்கிறது.
AI என்றால் என்ன?
Artificial Intelligence என்பது கணினி அமைப்புகள்(Computer Systems) மற்றும் மென்பொருள்களுக்கு (softwares), மனிதனின் நுண்ணறிவு போன்ற திறன்களை வழங்கும் ஒரு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கிளை ஆகும்.

சுருங்க சொன்னால் “செயற்கை நுண்ணறிவு என்பது மனிதன் போல சிந்திக்கக்கூடிய மெஷின்.”
அதாவது கணினி கற்றுக்கொள்ளும், முடிவெடுக்கும், பேசும், எழுதும், ஓவியம் வரைக்கும்… எல்லாம் செய்யக்கூடியது.
இதில் முக்கியமான செயல்பாடுகள்:
- தரவுகளை பகுப்பாய்வு செய்வது (Analyzing data)
- கற்றுக்கொள்வது (Learning)
- முடிவெடுத்தல் (Decision Making)
- மொழியை புரிந்து கொள்ளுதல் (Natural Language Processing)
- காட்சிகளை புரிந்துகொள்ளல் (Computer Vision)
AI செயல்முறை – அடிப்படை கட்டமைப்பு
AI ஒரு நேரடி செயல்முறை அல்ல. இது பல கட்டங்களைக் கொண்ட ஒரு முறைமை. முக்கியமானவை கீழ்வருமாறு:
1. தரவு சேகரிப்பு (Data Collection):
- AI கற்றுக்கொள்ளும் அடிப்படை அம்சம் தரவுகள். இது உரை, படம், வீடியோ, எண்கள் போன்ற பலவகையானதாக இருக்கலாம்.
2. தரவு சுத்திகரிப்பு மற்றும் பகுப்பாய்வு (Preprocessing & Analysis):
- முதலில் தரவுகள் சுத்திகரிக்கப்படும். பிறகு, முக்கிய அம்சங்கள் எடுக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படும்.
3. கற்றல் (Machine Learning):
- AI மாடல்கள், கடந்த தரவுகளை கொண்டு “pattern” களை கற்றுக்கொள்கின்றன. இதன் மூலம் எதிர்கால முடிவுகளை கணிக்க முடியும்.
4. மாதிரி உருவாக்கம் (Model Building):
- Machine Learning அல்லது Deep Learning மூலம் ஒரு கணிப்பாய்வு மாதிரி (Predictive Model) உருவாக்கப்படுகிறது.
5. முடிவெடுக்கும் திறன் (Inference):
- புதிய தகவல்களை AI மாடல் எதிர்பார்த்து, ஒரு முடிவை தருகிறது. இது ஒரு பரிந்துரை, ஒரு பதில், அல்லது ஒரு செயல் வடிவமாக இருக்கலாம்.

Machine Learning மற்றும் Deep Learning
AI-யின் முக்கிய பகுதிகள்:
Machine Learning (ML) (இயந்திர கற்றல்)
தரவுகளின் அடிப்படையில் கணினி தானாக கற்றுக்கொள்ளும் முறை. உதாரணம்: உங்களுக்கு பிடித்த வீடியோக்களை YouTube பரிந்துரைக்கிறது.
Deep Learning
மனித மூளை போல் செயல்படும் நுண்ணறிவு முறை. இது பெரும்பாலும் நெட்வொர்க் மாடல்கள் (Neural Networks) மூலம் செயல்படுகிறது. உதாரணம்: முகம் அடையாளம் காணும் மென்பொருள்கள்.
Natural Language Processing (NLP):
NLP என்பது AIயின் ஒரு பகுதியாகும். இது மனித மொழிகளை புரிந்து, பதிலளிக்கும் திறனை கொண்டது.
உதாரணம்: ChatGPT, Google Assistant, Alexa போன்றவை.
AI பயன்பாடுகள் – நம்மைச் சுற்றி
- வணிகம் – வாடிக்கையாளர் சேவை, Chatbots
- பொழுதுபோக்கு, சினிமா – Netflix, Amazon, youtube பரிந்துரை முறை
- மருத்துவம் – நோயறிதல், மருத்துவ பரிந்துரைகள்
- வேலைவாய்ப்பு – ரெஸ்யூமே ஸ்கிரீனிங், திறனடிப்படையிலான பரிந்துரை
- உயர் தொழில்நுட்பம் – சுய இயக்கக் கார்கள் (Self-driving cars)
எந்த துறையில் முன்னேற விரும்பும், எதிர்காலத் தொழில்நுட்ப வளர்ச்சியை புரிந்து கொண்டு பயன் பெற விரும்பும் ஒவ்வொருவரும் AI-யை பற்றி அறிந்து கொள்ளவது அவசியமே .