தமிழகத்தின் நகரங்களில் பெரு வளர்ச்சி பெற்றுவரும் கோவை நகரத்தில் புதிதாக திறக்கப்படுள்ளது லுலு ஹைப்பர் மார்கெட்.
கோவை லட்சுமி மில் வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள லுலு குழுமத்தின் இந்த ஹைப்பர் மார்க்கெட் ,
ஏறக்குறைய 1.1 லட்சம் சதுர அடியில் பரந்து விரிந்து கிடக்கும் இங்குள்ள ஹைப்பர் மார்கெட்டில் புதிய உணவு, நேரடி சமையலறை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், அழகு சாதனப் பொருட்கள் போன்றவற்றுக்கான பிரிவுகள் உட்பட பல பிரிவுகள் உள்ளன. “புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் தமிழ்நாட்டின், உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பெறப்படுகிறது” என்று குழுவின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லுலு குழுமத்தின் தலைவர் எம்.ஏ.யூசுப் அலி, ஹைப்பர் மார்க்கெட் திறப்பு விழாவுக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஹைப்பர் மார்க்கெட்தான் தமிழகத்தில் குழுமத்தின் முதல் திட்டம். 3,000 கோடி முதலீடு செய்ய மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, சென்னையில் லுலு மால் ஒன்றை உருவாக்க உள்ளது. மேட்டுப்பாளையம் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் உணவு பதப்படுத்தும் ஆலைகளை அமைத்து அதன் ஏற்றுமதி மற்றும் விற்பனை நிலையங்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. தஞ்சாவூரில் அரிசி ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறது. இந்த குழுமம் தமிழகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கிட்டத்தட்ட 6,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
லுலு குழுமம் உலகளவில் 250 ஹைப்பர் மார்க்கெட்களைக் கொண்டுள்ளது, மேலும் மாநிலத்தில் இருந்து நிறைய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான மிகப்பெரிய சாத்தியம் உள்ளது, என்றார்.