மசாலா பொடிகளின் ராணி என்று கோடிக்கனக்கான மக்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் சக்தி மசாலா 1975ல் திரு CP துரைசாமி அவர்களால் சக்தி டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் மஞ்சள் வியாபரத்தில் துவங்கிய வணிகம் , பிறகு பிற மசாலா பொட்களின் விற்பனையாக விரிந்தது. அந்த காலகட்டத்தில் உடனடி மசாலா பொடிகளை விற்பது மிக மிக சவாலாகவே இருந்தது இருந்தும் திரு துரைசமி அவர்களின் ஆர்வமும் உழைப்பும் நிறுவனத்தை மேலும் மேலும் உயர்த்தியது.
Sakthi Trading Company யாக இருந்த நிறுவனம் 1997ல் சக்தி மசாலா என்ற ப்ரண்டாக உருவெடுத்தது. 50 வகையான மசாலா பொடிகளோடு, 12 க்கும் மேற்பட்ட ஊறுகாய் வகைகள், மாவு வகைகள். அப்பளம், நெய், எண்ணை என்று சமையல் பொருட்களை தயாரித்து வருகிறது..
அதிக பெண் மற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களை கொண்ட நிறுவனம் என்ற பெருமையொடு மிக அதிகமான விருதுகளையும் வாங்கி குவித்திருக்கும் சக்தி மசாலா எனும் இந்த ப்ராண்ட் தமிழகத்தின் பெருமைக்குறிய ப்ராண்டாக உயர்ந்து நிற்க்கிறது.