Save 20% off! Join us newsletter and get 20% off for premium content!

கிரியேட்டிவ் ஸ்பாட்லைட்: “Don’t Drink & Drive” – நெஸ்காஃபே கோல்டின் ஒரு சூப்பர் விளம்பரம்!

“DON’T DRINK & DRIVE”
Settle for just any coffee, something special, let it drive the moment.

“Don’t Drink & Drive” – இந்த வார்த்தைகள் ஒரு எச்சரிக்கை செய்தியை சொல்வதாக தோன்றும். ஆனால் நெஸ்காஃபே இதனை முற்றிலும் வேறொரு கோணத்தில் பாவித்து, ஒரு அசத்தலான விளம்பரத்தால் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.

இந்த விளம்பரம் முதலில் பார்த்தவுடன் ஒரு பொது பாதுகாப்பு பிரச்சாரமாகத் தெரிகிறது. ஆனால் வாசிப்பை தொடரும் போது, நெஸ்காஃபே ஒரு முக்கியமான செய்தியைக் கூறுகிறது:

“சிறப்பான எந்த காபியை வேண்டுமானாலும், அருந்துங்கள், அது உங்கள் தருணத்தை உற்சாகப்படுத்தட்டும்.

மாற்றியமைக்கப்பட்ட வார்த்தைகள் – பிரம்மிக்க வைக்கும் பார்வை
இந்த விளம்பரத்தில் “Drink” என்றால் வழக்கம்போல் மது அருந்துவதை அல்ல – இது ஒரு சிறந்த காபி அனுபவத்தை குறிக்கிறது. அதேபோல், “Drive” என்பதும் வாகனம் ஓட்டுவதை குறிக்கவில்லை – அது உங்கள் நாளை ஊக்கத்துடன் இயக்கும் ஆற்றலை, உற்சாகத்தை குறிக்கிறது.

இந்த வார்த்தைகள் எதிர்பாராத கோணத்தில் பயணிக்கும்போது, பார்வையாளரிடம் கற்பனையைத் தூண்டி, மெசேஜ் மனதில் பதிய வைக்கின்றன.

இந்த விளம்பரத்தின் முக்கியத்துவம் – மக்கள் எதிர்பார்த்ததைத் மாற்றி காபியின் முக்கியத்துவத்தை மனதில் பதியச் செய்கிறது.

சிந்தனையை தூண்டி மனதை ஈர்க்கும் வடிவமைப்பு
வலதுபுறம், நெஸ்காஃபே கோல்ட் பாட்டில் காணப்படுகிறது. அதன் மேல் பகுதி காபி பீன்ஸ் மற்றும் பவுடரில் உருவான ஒரு “மதுப் பாட்டிலின்” வடிவத்தை ஒத்திருக்கிறது. இது நம்மை குழப்பி ஆச்சரியப்படச் செய்கிறது. ஆனால் அது தான் இந்த விளம்பரத்தின் மையம்.

அந்த புரிதல் தருணத்தில் தான், இந்த விளம்பரம் நம் மனதில் பதிகிறது.
பிராண்ட் செய்தி
நெஸ்காஃபே இங்கு சொல்ல வருவது – காபி என்பது வெறும் பானம் அல்ல, அது ஒரு அனுபவம்.
“சாதாரண காபியுடன் சமாதானப்பட வேண்டாம்” என்று கூறி, அந்த தருணத்தையே மாற்றும் சக்தியை நெஸ்காஃபே கோல்டில் காண்க என ஊக்குவிக்கிறது.

இந்த விளம்பரம் நம்மை ஏன் கவர்கிறது?

சரியான வார்த்தை விளையாட்டு – பழக்கமான வாசகங்களை புதுமையாகப் பயன்படுத்தல்

விஷுவல் ட்விஸ்ட் – மதுப்பாட்டி போல காபி ஷேப்

தெளிவான பிராண்ட் பொசிஷனிங் – Premium காபி அனுபவம்

பண்பாட்டு தொடர்பு – அனைவருக்கும் பரிச்சயமான ‘Don’t Drink & Drive’ வாசகம், உடனடி கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய அர்த்தத்துடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிராண்ட்களுக்கு பாடம்

இந்த விளம்பரம் ஒரு முக்கியமான பாடத்தை சொல்லுகிறது – பெரிய பட்ஜெட்டோ, பிரபலங்கள் தேவையில்லை. ஒரு நல்ல யோசனை போதுமானது. தெரிந்த ஒன்றை வித்தியாசமான வகையில் சொல்லும்போது – அதுவே பிற பிராண்டுகளிலிருந்து தனித்து தெரிய செய்யும்.