பொதுவாக வணிகத்தில் ஒரு பொருளையோ, சேவைகளையோ நுகர்வோரின் மனதில் தனித்துவமான ஒரு அடையாளத்தை, பார்வையை உருவாக்கி அதன் மூலம் தொடர்ந்து வணிக வெற்றியை அடைவதே ப்ரண்டிங்.
தன்னை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்க செய்யும் யுக்தியை உருவாக்க மனிதர்களில் சிலருக்கு மட்டுமே சாத்தியம் உண்டு அப்படி சிலரில் முக்கியமானவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
மிக சாதாரண நிலையில் இருந்து தன்னை ஒரு சூப்பர் ஸ்டாரக உயர்த்தி இந்திய திரை ரசிகர்களால் தலைவா என்று கொண்டாடப்படும் ரஜினிகாந்த் என்ற மனிதர் தன்னை எப்படி ப்ராண்டாக்கிகொண்டார்.
ப்ராண்டிங்கின் அடிப்படை என்ன தெரியுமா அந்த ப்ராண்டை சந்தைபடுத்துவதற்க்கு முன் அதற்கான தகுதியை உருவாக்கிகொள்வது..
பேருந்து நடத்துனராக இருந்து நடிகனாக தன்னை உருவாக்கிகொள்ள ரஜினி எடுத்த முதல் முயற்சி நடிப்பை முறையாக கற்றுக்கொள்வது. திரைப்பட கல்லூரியில நடிப்பு படிப்பை முடித்தபோது இயக்குனர் சிகரம் பாலசந்தர் எனும் திரைச்சிற்பியால் கண்டுகொள்ளப்பட்டு திரையில் அறிமுகமானார். சிவாஜி ராவாக இருந்தவர் ரஜினிகாந்த் ஆனார். அந்த பெயர் அந்த மனிதருக்கு எப்படி பொருந்திபோனது. வேறு எந்த நபருக்காவது இப்படி பெயர் பொருத்தம் அமையுமா?.
ஒருமுறை ரஜினிகாந்த் பற்றி திரு பாலச்சந்தர் இப்படி குறிப்பிடுகிறார்,
“ரஜினி, என்னை அவரது வழிகாட்டி என்று கூறுகிறார். ஆனால், நான் அறிமுகப்படுத்திய ரஜினிகாந்த், இவர் அல்ல என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். அவருக்கு வாய்ப்பளித்தேன், அவரை உலகிற்கு வெளிப்படுத்தினேன் அவ்வளவே, ஆனால் அவர் தனது சொந்தத் தகுதி, மற்றும் தனித்தன்மை மூலம் வெற்றி அடைந்துள்ளார்.”
மக்கள் தங்களின் மனதில் அந்த மனிதருக்கு, அந்த பெயருக்கு தந்திருக்கும் இடம் இன்னருவரால் இப்படி இடம் பிடிக்க முடியுமா. ரஜினிகாந்த் தன்னை எப்படி நிலை நிறுத்திக்கொண்டார் (Position)? தெரிந்ததுதானே style என்ற அந்த தனித்துவத்தை.,ப்ராண்டிங்கில் மிக முக்கியமானது தனித்துவம்தானே.
கிட்டத்தட்ட 47 வருடங்கள், 163 திரைப்படங்கள் ( இன்னும் தொடரும்), தோல்விகளையே வெற்றியாக மாற்றும் வல்லமை. ரஜினிக்கு நிகர் அவரே.
எத்தனை விமர்சனங்கள் அவர்மீது வைத்தாலும் கோடிக்கனகானவர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன், அவர் ஒரு ப்ராண்ட், அதுவும் வயது வித்யாசம் இல்லாமல் மக்களின் மனதில் கொண்டாடப்படும் ‘தலைவா’ எனும் emotional connect உள்ள ஒரு legend brand.
பிறந்த நாள் வாழ்த்துகள் சூப்பர்ஸ்டார் ரஜினி சார்.