Save 20% off! Join us newsletter and get 20% off for premium content!

Recur Club: ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான நிதி சந்தை தளம் (Debt Marketplace)

நம்மில் பலருக்கு, ஒரு சூப்பர் ஐடியா இருந்தும், ” இந்த ஐடியாவுக்கு எங்கிருந்துடா காசு வரும்?”ங்கற கேள்விதான் முதல் தடையா நிக்கும். குறிப்பா, ஸ்டார்ட்அப் ஆரம்பிக்கிறவங்களுக்கும், சின்னதா ஒரு தொழில் (SME) பண்றவங்களுக்கும் இந்த பணப் பிரச்சினை ஒரு பெரிய மலை மாதிரி தெரியும். பேங்க்ல போய் கால் கடுக்க நின்னு, எக்கச்சக்க பேப்பர் கொடுத்து, லோன் வாங்கறதுக்குள்ளயே பாதி தெம்பு போயிடும், இல்லையா?

Recur Club! Startup மூலதனம் மற்றும் நிதிப் பிரச்னையை தீர்க்க துவங்கப்பட்டதே ஒரு நிதி சந்தை தளம்

Recur Clubனா என்னங்க?

ரொம்ப சிம்பிளா சொல்லணும்னா, இது ஒரு ஆன்லைன் பஜார் மாதிரி. ஆனா, இங்க விக்கிறதும் வாங்கறதும் காசுதான்! உங்களுக்குப் பணம் தேவைப்பட்டா, Recur Club தளத்துக்குப் போயி, உங்களோட பிசினஸ் விவரங்களைச் சொன்னா போதும். அங்கே வரிசையா பல நிதி நிறுவனங்கள், கடன் கொடுக்கிறவங்களும் காத்திருப்பாங்க. அவங்க உங்க பிசினஸ்ஸை அலசி ஆராய்ந்து, ஆஃபர் கொடுப்பாங்க. நீங்க சிறந்த ஆஃபரைத் தேர்ந்தெடுத்து, பணத்தைப் பெற்றுக்கலாம்.


இது எப்படி மத்த லோன் மாதிரி இல்லாம ஸ்பெஷல்?

Recur Club ன் சிறப்பு அம்சம்

  1. ஷேர் கொடுக்க வேணாம் (Non-dilutive Funding): நீங்க ஒரு ஸ்டார்ட்அப் ஆரம்பிக்கும்போது, முதலீடு வாங்கறதுக்கு உங்க கம்பெனி ஷேர்களை விக்க வேண்டியிருக்கும். அப்படி வித்தா, உங்க கம்பெனியோட உரிமை கொஞ்சம் கொஞ்சமாப் போயிடும். ஆனா Recur Clubல கடன் மாதிரி பணம் கிடைக்கிறதால, நீங்க உங்க கம்பெனி ஷேர்களை யாருக்கும் விக்க வேண்டாம். முழு உரிமையும் உங்க கைலேயே இருக்கும்! இது ஸ்டார்ட்அப் பசங்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!
  2. பணம் ‘பட்பட்’னு கிடைக்கும் (Fast & Transparent): பேங்க்ல லோன் வாங்கப் போனா, ஒரு மாசம், ரெண்டு மாசம் கூட ஆகலாம். ஆனா Recur Clubல நீங்க விண்ணப்பிச்ச 48 மணிநேரத்துக்குள்ளேயே பணம் கைக்குக் கிடைக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க. அதுமட்டுமில்லாம, எந்த மறைமுகக் கட்டணமும் இல்லாம, எல்லாமே வெளிப்படையா இருக்கும்.
  3. பல விதமான லோன்கள்: உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படுது, உங்க பிசினஸ் என்ன மாதிரின்னு பார்த்து, அதற்கேத்த மாதிரி பல விதமான கடன் வகைகளை இவங்க வச்சிருக்காங்க.
    • Recur Swift: ஒரு ரூபாயில இருந்து 10 கோடி ரூபாய் வரைக்கும், எதுவுமே அடமானம் வைக்காம வேகமா வாங்கலாம்.
    • Recur Scale: பெரிய நிறுவனங்களுக்கும், SME-களுக்கும் 100 கோடி ரூபாய் வரைக்கும் தேவைப்பட்டா, இது சூப்பரா இருக்கும்.
  4. பல துறைகளுக்குப் பொருந்தும்: நீங்க சாஃப்ட்வேர் (SaaS), ஈ-காமர்ஸ், D2C பிராண்ட், EV, உற்பத்தி, ஹெல்த்டெக்னு எந்தத் துறையா இருந்தாலும் சரி, Recur Clubல உங்களுக்குப் பணம் கிடைக்க வாய்ப்பு இருக்கு.

யார் இதை ஆரம்பிச்சாங்க?

2021ல இந்த Recur Clubஐ Eklavya Gupta மற்றும் Abhinav Sherwal ஆரம்பிச்சாங்க. இவங்க ரெண்டு பேருமே IIM கல்கத்தாவுல படிச்சவங்க.


என்னப்பா சொல்றீங்க? அப்போ இனி பிசினஸ் ஆரம்பிக்க பணப் பிரச்சினை இல்லையா?

ஆமாங்க! Recur Club வந்த பிறகு, இந்திய ஸ்டார்ட்அப் மற்றும் SME துறைக்கு ஒரு புது வெளிச்சம் கிடைச்சிருக்கு. இதுவரைக்கும் 2500 கோடி ரூபாய்க்கு மேல இவங்க மூலமாப் பல நிறுவனங்களுக்கு நிதி வழங்கபப்ட்டிருக்கிறது.

சமீபத்துல D2C பிராண்டுகளுக்காக மட்டும் 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்காங்க. அப்புறம் CollegeDekho-ங்கிற கம்பெனிக்கு 40 கோடி ரூபாய் கொடுத்திருக்காங்க. உலக அளவில் பெரிய முதலீட்டாளர்களான InfoEdge Ventures, Village Global போன்ற நிறுவனங்கள் கூட Recur Clubல $30 மில்லியன் முதலீடு செய்திருக்கிறார்கள்

சோ, உங்ககிட்ட ஒரு சூப்பரான பிசினஸ் ஐடியா இருக்கா? பணம் தான் தடையா இருக்கா? அப்போ Recur Club ஒருமுறை செக் பண்ணிப் பாருங்க. உங்க கனவுக்குக் கைகொடுக்க இது ஒரு சூப்பரான வாய்ப்பா இருக்கலாம்!