உலகின் உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலீஃபாவில், லேசர் காட்சிகள் அரங்கேற்றப்படும், அந்த வகையில் உலகின் மிக உயரமான திரையாக உள்ள புர்ஜ் கலீஃபாவில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் ஆகியோரின் நடிப்பில் ஜுன் 3 அன்று வெளியாகவிருக்கும் விக்ரம் திரைப்படத்தின் பிரமோஷன் காட்சிகள் வெளியிடப்பட்டது.
2717 அடி உயரம்கொண்ட இந்த கட்டிடத்தில் இதுவரை எந்த தமிழ் படத்தின் ட்ரைலரும் வெளியானதில்லை. விக்ரம் படமே இந்த சாதனையயும் செய்திருக்கிறது. இந்த நிகழ்வை ரசிகர்களும், திரையலகமும் ஆச்சர்யமாக கொண்டாடி வருகிறது
நேற்று இரவு 8.10 க்கு டிரைலர் காட்சிகள் வெளியிடப்பட்டது. இதில் கமலஹாசன் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.