சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்தியாவின் முண்ணனி டையர் ப்ராண்டான MRF Ltd, உலகின் இரண்டாவது வலிமையான டயர் பிராண்டாக உருவெடுத்துள்ளது.
“AAA- பிராண்ட் மதிப்பீட்டோடு டயர் மேஜர் பிராண்ட் வலிமையில் 100க்கு 83.2 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறது.” என்று MRF தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் “MRF கிட்டத்தட்ட எல்லாவிதமான அளவீடுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று உலகின் இரண்டாவது வேகமாக வளரும் டயர் பிராண்டாகவும் இடம்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
MRF மிகவும் மதிப்புமிக்க இந்திய டயர் பிராண்டாகவும், நிலைத்தன்மை உணர்திறன் மதிப்பில் அதிக மதிப்பெண் பெற்றதாகவும், முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய டயர் தயாரிப்பாளராகவும் இந்த அறிக்கை உள்ளது.