இந்திய திரை ரசிகர்களின் மனதோடு கலந்திருக்கும் ஒர் பெயர் ஏவிம், இந்தியாவில் திரைப்படம் அறிமுகமான 1931 ல் ஏவி மெய்யப்ப செட்டியார் அவர்களால் சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்ற பெயரில் துவங்கிய நிறுவனம் தன்னுடைய முதல் திரைப்படத்தை 1935ல் வெளியிட்டது. சில தோல்விகளை சந்தித்தாலும், திரு.ஏவி மெய்யப்ப செட்டியார் அவர்களின் முயற்ச்சியும், உழைப்பும், தொலை நோக்கு பார்வையும், துல்லியமான திட்டங்களும் அவருக்கு தொடர் வெற்றியை தர்த்துவங்கியது. 1946ல் AVM என்ற பெயரில் திரைப்பட ஸ்டுடியோவை துவங்கி திரைபடங்களை தயாரிக்க ஆரம்பித்தார். பெரிய வசதிகள் இல்லாத அந்த காலத்திலேயே புதிய புதிய முயற்சிகளை வெற்றிகரமாக செய்யத்துவங்கியிருந்தது AVM நிறுவனம். பெரும்பான்மையான இந்திய மொழிகளில் தன்னுடைய திரைப்பட தயாரிப்பை விரிவுபடுத்தினார் ஏவிம்.
நடிகர்திலகம் சிவாஜி கணேசன், உலக நாயகன் கமலஹாசன் உட்பட ஏராளமான கலைஞர்கள், தொழில் நுட்பவல்லுனர்களை திரைத்துறைக்கு அறிமுகம் செய்திருக்கும் ஏவிம்.
177 திரைப்படங்கள், ஏராளமான தொலைகாட்சி தொடர்கள், குரும்படங்கள், தற்போதைய திரையின் நவின வடிவமான OTT, Web Series ஆகிய தளங்களிலுன் தன்னுடைய முத்திரையை பதித்துவருகிறது ஏவி மெய்யப்ப செட்டியார் அவர்களின் மகனான ஏவிம் சரவணன் அவர்களின் தலைமையில் நான்காம் தலைமுறையோடும் திரைப்படத் துறையில் பெருமைக்குறிய ஒரு ப்ராண்டாக தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்கிறது ஏவிம் நிறுவனம்.,