1911ல் தனது முதல் போக்குவரத்து சேவையுடன் TVS நிறுவனத்தை ஒரு வெற்றிகரமான ப்ராண்டாக துவக்கினார் TV சுந்தரம் ஐயங்கார் அவர்கள்..
கிட்டத்தட்ட 60,000 கோடி வருவாயோடு TVS என்ற ப்ராண்டின் கீழ் 90 நிறுவனங்கள் TVS Group நிறுவனங்களாக இயங்கிவருகிறது..
1980 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் ஓசூரில் உள்ள தொழிற்சாலையிலிருந்து இந்தியாவின் முதல் இரண்டு இருக்கைகள் கொண்ட மொபெட்டாக டிவிஎஸ் 50 வெளிவந்து இன்று வரை விற்பனையில் சக்கைபோடு போடுகிறது.
டி வி எஸ் மோட்டார்ஸ் 13 விதமான இருசக்கர மற்றும் 3 சக்கர வாகனங்கள் தயாரிக்கிறது. ஏறக்குறைய 19000 கோடி வருவாய்யோட இந்தியாவின் மூன்றாவது பெரிய இரு சக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனமா வெற்றி நடை போடுகிறது. மோட்டார் வாகன விற்பனையில் 14.35 % மார்கெட் 3 million வாகனங்கள் வருட விற்பனையோடும் இன்னும் புதிய புதிய அறீமுகங்கலோடும் வெற்றிகரமாக இயங்கிட்டு வருது.
திரு.வேணு ஸ்ரீனிவாசன் அவர்களோட தலைமையில் இயங்கிகொண்டிருக்கும் டி வி எஸ் நிறுவனம் எராளமான விருதுகளையும் வாங்கியுள்ளது.