Ola Electric Mobility Pvt Ltd (OEM), கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், SIPCOT போச்சம்பள்ளியில், ₹7,614 கோடி முதலீட்டில் செல் உற்பத்தி ஆலை மற்றும் மின்சார 4 சக்கர வாகன உற்பத்தி ஆலையை அமைக்க தமிழக அரசுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.Ola Cell Technologies Pvt Ltd மற்றும் Ola Electric Technologies Pvt Ltd மூலம் உற்பத்தி வசதிகள் அமைக்கப்படும்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மொத்த முதலீட்டில், ஓலா செல் டெக்னாலஜிஸ் முறையே ₹5,114 கோடியும், ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜிஸ் ₹2,500 கோடியும் 5 ஆண்டுகளில் முதலீடு செய்யும். புதிய உற்பத்தி நிலையங்கள் 3,111 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கும்.
இந்த முதலீட்டின் மூலம், ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி, ஆண்டுக்கு 1,40,000 யூனிட்கள் மற்றும் 20 ஜிகாவாட் திறன் கொண்ட ஜிகா பேக்டரி என்ற மின்சார 4-சக்கர வாகன ஆலையை நிறுவ இலக்கு வைத்துள்ளது. மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் மற்றும் ஓலா நிறுவன சிஇஓ பவிஷ் அகர்வால் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.