பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியான நிதி சிங் மற்றும் ஷிகர் வீர் சிங் ஆகியோர் தங்களுடைய அதிக ஊதியம் பெறும் வேலையை விட்டுவிட்டு 2015 ஆம் ஆண்டு “சமோசா சிங்” (samosa king) என்ற பெயரில் சொந்த உணவுத் ஸ்டார்டப் ஒன்றை தொடங்கினார்கள். ஷிகரின் சமோசாவின் மீது கொண்ட காதலும், அதை பிரபலமாக்க வேண்டும் என்ற அவரது விருப்பமும்தான் இந்த ஸ்டார்ட்அப்பிற்கான முதல் புள்ளி. ₹80 லட்சம் மதிப்புள்ள தங்கள் வீட்டை விற்று துவங்கிய இந்த நிறுவனத்தின் வருமானம் ஆண்டுக்கு ₹45 கோடி மற்றும் ஒரு நாளைக்கு சுமார் ₹12 லட்சங்கள் வருவாய் ஈட்டுகிறது.
பயோகான் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை விஞ்ஞானியான ஷிகர் மற்றும் குருகிராமில் உள்ள மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் நிதி, ₹30 லட்சம் சம்பளம் பெறும் வேலையை விட்டு, ரிஸ்க் எடுத்து தங்கள் சொந்த தொழிலைத் தொடங்க முடிவு செய்தனர். அவர்கள் கடாய் பனீர் சமோசாக்கள், ஆலூ மசாலா சமோசா, மசாலா கார்ன் சமோசா, பஞ்சாபி ஆலு சமோசா போன்ற அனைத்து வகையான சமோசாக்களை புதுமையான முறையில் தயாரித்து வழங்குகிறார்கள்.