மக்கள் ஒரு பிராண்டை தேர்ந்தெடுக்கும் போது என்ன யோசிக்கிறாங்க தெரியுமா? மனசுக்குள்ள நுழைந்து பார்ப்போம்!

ஒரு பிராண்டின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் மிக முக்கியமான காரணம் – அதன் வாடிக்கையாளர்களின் மனம். நம்ம தமிழ்நாட்டுல வாடிக்கையாளர் யோசிப்பது, வாங்குவதற்கான காரணங்கள், நம்பிக்கைகள், நம்புறுதிகள் எல்லாமே தனி level.

அந்த மனதை நம்ம புரிஞ்சுக்கிட்டா தான், ஒரு பிராண்டு எப்போதும் people’s brand ஆக மாறும். இதோ, தமிழ்நாட்டு வாடிக்கையாளரின் மனசுக்குள்ள ஒரு சிறிய பயணம்:

1. உணர்வுகள் தான் முதன்மை

வாடிக்கையாளர் first decision logic-ல எடுத்தாலும், final decision mostly emotion-ல தான் எடுத்துவாரு.
– “இதுல தான் பசங்க சந்தோஷமா இருக்காங்க.”
– “அம்மாவுக்கு இது வேணும்.”
– “பத்து வருட பழக்கமா இத தான் வாங்குறேன்.”

அதனால, emotional connection இல்லாத brand-க்கு repeat customers கிடைக்குறது கஷ்டம்.

2. விலைக்கு மதிப்பு இருக்கணும்

“Cheap” ஆக இருக்கணும் அப்படின்னு இல்ல.
“Value for money” – இது தான் real keyword.

ஒரு வாடிக்கையாளர் யோசிப்பது:

“இவ்வளவு காசு கொடுத்தேன். இந்த product/service அதை நியாயப்படுத்துறதா?”

3. நம்பிக்கையும் நற்பெயரும் முக்கியம்

அந்த brand மேல ஏற்கனவே நம்பிக்கை இருக்கா? மற்றவர்கள் recommend பண்ணிருக்காங்களா?
இது மட்டும் போதும் ஒரு product வாங்க final push கொடுக்க.

அதனால தான்:
– Product reviews
– User testimonials
– Celebrity/influencer endorsement
எல்லாம் முக்கிய marketing tools.

4. மற்றவர்களின் கருத்து (Social Proof)

“இத தான் எல்லாரும் வாங்குறதா?” – இந்த கேள்வி நிறைய பேருக்குள் இருக்கும்.
ஒரு brand வை பற்றி நாம் சொல்ல வேண்டியதுக்கு முன்னாடியே, மற்றவர்கள் சொல்லுறதை நம்புற tendency அதிகம்.

அதனால தான்:
– “5000+ happy customers”
– “Amazon best seller”
– “Top rated in…” போன்ற badge-க்கள் வேலை செய்றது.

5. மனதின் shortcut – Familiarity

வாடிக்கையாளர் ஒரு brand-ஐ பழகியிருக்கிறாரா?
அந்த logo, அந்த advertisement jingle, அந்த color – familiarity தான் பயம் இல்லாம decision எடுக்கச் செய்கிறது.

தெரிஞ்ச brand = பாதுகாப்பு என்று மனசு நம்பும்.

6. பராமரிப்பு & சேவையை பற்றிய எதிர்பார்ப்பு

Product மட்டும் நல்லா இருந்தா போதாது. அதன் பின் service, replacement, customer support-ம் equally முக்கியம்.

மனதில் இருக்குற கேள்வி:

“இதை வாங்கினபின் ஏதாவது பிரச்சனை வந்தா யாரை தொடர்பு கொள்ளலாம்?”

7. Packaging, Feel & First Impression

ஒரு product எப்படி design பண்ணப்பட்டுள்ளது, எப்படி packed பண்ணப்பட்டுள்ளது, எப்படி present பண்ணப்பட்டுள்ளது – இதெல்லாம் கூட பெரிய முக்கியம் உடையது.

– Simple-a இருந்தாலும் aesthetic-ஆ இருக்கணும்
– User-friendly-a இருக்கணும்
– Attention grabbing இருக்கணும்

ஒரு brand வெற்றி பெறணும்னா, அது product மட்டும் strong-ஆ இருக்கணும் என்பதல்ல.
வாடிக்கையாளர் எப்படி யோசிக்கிறார்கள், எப்படி உணர்கிறார்கள், எப்படி முடிவு எடுக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்கிற வணிகம் / பிராண்ட் சந்தையில் நீண்ட காலம் நிலைத்திருக்கும்.

மனதை வென்றால் மார்க்கெட்டை வெல்லலாம்!

#வாடிக்கையாளர் மனம் #Customer psychology in Tamil #Brand success Tamil #வணிக உளவியல் #Consumer behaviour Tamil #Emotional marketing Tamil #வாடிக்கையாளர்கள் எப்படி யோசிக்கிறார்கள்

Share.
Leave A Reply